மாசி மகம் சிறப்புகள்: பித்ருதோஷம், துன்பங்கள் நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும்

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும்.

( பட விளக்கம் : தாமிரபரணி ஆறு, வியாச தீர்த்த கட்டம், சேரன்மகா தேவி)
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனாக புவி ஆள்வார்கள். மிகுந்த திறன் படைத்தவர்கள் என பல சிறப்புகளை பெற்றது மகம் நட்சத்திரம். மகம் நட்சத்திரம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாக கருதப்படுகிறது.

எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பானதாககொண்டாடப்படுகிறது. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும்.காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். நாளை (பிப்ரவரி 24) மாசிமகம் ஆகும்.

மாசி மகம் சிறப்புகள்:
சந்திரன் முழு சக்தி உடையதாய் திகழும் பௌர்ணமி முழு நிலவு தோற்றமானது, மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். வருடத்திற்கு ஒரு முறை வரும், மகமும், பௌர்ணமியும் இணையும் மாசிமகம் இதனால் மிகவும் சிறப்பான நாளாக உள்ளது.சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. இந்த மாசி மகத்தன்று தான், கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.

உமா தேவியார் மாசிமாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. மாசிமகம் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. மேலும் சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசிமகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

பித்ரு தோஷம் நீங்கும் :
பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளம், தாமிரபரணி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
மாசிமகத்தன்று பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
கன்னியாகுமரி , திருசெந்தூர், விஜயாபதி, ராமேஸ்வரம்,
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு, கும்பகோணம்,
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் மற்றும்

பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.
இந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் இருக்கும் ஆறுகள், நீர்நிலைகளில் கங்கையை வேண்டிக் கொண்டு பிதுர் தர்ப்பணம் செய்யுங்கள். பித்ரு தோஷம் நீங்கும். நல்ல பலன் கிடைக்கும்.
மாசிமகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

மாசிமகம் வழிபட கிடைக்கும் பலன்கள் :
பித்ரு தோஷம் நீங்கும்
மாசிமகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
மாசிமகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *