தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது.
சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது.
இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.
” புராணங்கள் அதைத் ‘ தஹ்ரம் ‘ என்கின்றன . புராணங்கள் சிதம்பர ரகசியத்தை ‘தஹ்ரம்’ என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள். உருவமின்றி இருப்பதால் ‘ அரூபம் ‘ என்றும் சொல்வார்கள் .
இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .
இது எப்பொழுதும் ‘ திரஸ்க்ரிணீ ‘ என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் .
நவரத்தினங்கள்
பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டே இருக்கும் .
இந்த ரகசிய ஸ்தானத்தை தரிசனம் செய்யும் போது என்ன பலன் வேண்டும்? என்பதை நினைத்து ஒருவன் தரிசனம் செய்தால் அவன் நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் .
ஒருவன் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் அவனுக்கு ஜன்ம விமோசனம் சித்திக்கும் .
எளிமையாகச் சொன்னால் ,
சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ;
எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது*
திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.
சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல் ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை.
பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும். உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.
சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.
சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்துவதே
சிதம்பர ரகசிய பீடம்.
இந்த சிதம்பர ரகசியம் என்பதற்கு சரியான விளக்கம்,இதை மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம்.
திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும்.
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. ‘மனிதனே !உன்னிடம் ஏதும் இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.