சைவம் என்றால் உணவல்ல உணர்வு! சைவர்கள் தீண்டாமை பழகுதல் தண்டனைக்குரிய குற்றம் திருமுறைகள் பாடிய நம் பெரியோர் கருவறைக்குள் புகுந்து பாடவில்லை. கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தவில்லை. தமிழ்“ மொழியின் தெய்வீகம் நிலைநாட்டப்பட்டது. பிறமொழி துவேஷம் பழகவில்லை. சீவர்களிடத்திலும் சிவனிடத்திலும் அளவிலா அன்புகாட்டி பிறவிப் பெருங்கடலை நீந்தலாம். சிவபெருமானே இறைவன் என்ற உறுதியோடு மனம், சொல், செயல் மூன்றும் ஒருங்கே இணைந்து அவரை வழிபடுவோர் கைவிடப்பட மாட்டார்கள்.
“உயர்சாதியில்” பிறந்தால் தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்தெரிகின்றது. “தாழ்ந்த சாதி” என்பது முத்தி அடையத் தடையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பெரியபுராணம் தூள்தூளாக்கிவிட்டது. இறைவனை அடைய ஒருவன் செய்கின்ற தொழிலுக்கு எவ்வித தொடர்புமில்லை என்பதை நிலைநாட்டுகிறது.
நிறைய சாத்திரங்களைப் படித்தவர்தான் இறைவனடி சேரமுடியம் என்ற நிலையை உடைத்தெரிகிறது பெரியபுராணம். இறைவனடி சேர மிகக் கடினமான தவமிருக்க வேண்டும். மிகக் கடினமான செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கருத்தும் “ உடைத் தெரியப்படுகிறது பூ போட்டவனுக்கு முக்தி சற்று தாமத மாகவும் 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிஷேகம் செய்பவனுக்கு முக்தி உடனே கிடைக்கம் என்ற மரபை உடைத்தெரிகிறது பெரியபராணம்.
சிவபெருமானை அடைந்திட எந்தவித ஆகமங்களும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஈசன் மீது அன்பும், பற்றுமே போதுமானது என்பதையம் உணர்த்துகின்றமக்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அவசியம்.
சிவ பூசைக்கும், சொத்துக்கும், சிவனடியாõக்கும் இடைஞ்சல் செய்தவர்களை மக்க@ள தண்டித்துள்ளனர் தமிழ்நாட்டில் ஒழுக்கமே உயர்வாகக் கருதப்பட்டுள்ளது.
இன்று போலவே அன்றும் நம்மிடையே சாதிச் சண்டையிட்டு சீரழிந்ததும், புறச்சமயத்தார் அரசின் துணையோடு வன்முறையைத் தூண்டி நம்மை துன்புறுத்தினர் என்பது புலனாகிறது.
சிவபெருமானின் அணுக்கத் தொண்டரான சுந்தரர் இப்பூமியில். தமிழகத்தில் அவதரித்து உலக இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் சிவபுரம் சென்றவர். இந்த 18 ஆண்டு காலத்திற்குள் அவர் நிகழ்திய வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்களில் ஒன்று திருத்தொண்டர் தொகையெனும் சிவனடியார்களில் நாயன்மார்களாக விளங்கிய 63 பேர்களின் வரலாற்றுக் குறிப்பாகும். அதை விரிவாக சோழநாட்டுப் பிரதமர் சேக்கிழார் பெருமான் நமக்கும், அன்றைய சோழநாட்டில் எதிர்காலத்தையும் எதிரிகளையும் எடை போடத் தெரியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென இருந்த மன்னனுக்கும், மக்களுக்கும் எழுதிய வரலாற்று ஆராய்ச்சிக் காவியமே பெரிய புராணம். புலையர் சமுதாயத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்ற அம்மையார் தேவாரப்பாடல்களை பண்வரிசை முறையில் அமைத்தார். பிறகு 12 திருமுறைகளும் தொகுக்கப்பட்டது. அதில் 12 ம் திருமுறை பெரிய புராணமாகும்.
அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய இளையதலைமுறைக்குத் தெரிய வேண்டியவற்றை சிறு குறிப்பாக வழங்கியுள்ளோம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் : திருக்கயிலாயத்தில் இருந்து கொண்டு ஐம்புலன்களால் ஆட்கொள்ளப்பட்ட காரணத்தால்“ மண்ணுலகிற்க ஈசனாலால் அனுப்பப்பட்டவர் திருநாவலூரில் அந்தண தொழிற்குலத்தில் உளுந்தூர் பேட்டை அருகில் பிறந்தார்.
(குலமிலராகிலும் குலத்திற்கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே – அப்பரின் வாக்கு இதன் அடிப்படையில் தொழிலின் அடிப்படையிலேயே குலம் அமைகிறது. குலத்தின் அடிப்படையில் தொழில் முற்காலத்தில் இல்லை.) தனது திருமணத்தின் போது ஈஸ்வரனால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். தனது பூர்வீகம் அன்றுதான் அவருக்குத் தெரியவந்தது. இவர் கேட்டதையெல்லாம் ஈசன் கொடுத்தார். செங்கற்களை தங்கக் கட்டியாக மாற்றிக் கொடுத்தார். மணிமுத்தாற்றில் 1000 பொற்காசுகளைக் கொட்டி திருவாரூர் தாமரைப் பொய்கையில் மூழ்கி எடுக்கச் செய்தார்.
திருவையாற்றில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஒட ஈசனை நினைத்து வேண்டினார் காவிரியின் மேற்குப்பகுதி பனியாக உறைந்து கிழக்குபகுதி நீர் வடிந்து ஆறு இவருக்கு வழிவிட்டது. ஆற்றறைக் கடந்தார் சுந்தரர். அவிநாசியில் முதலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுங்கிய பாலகனை மீண்டும் கரையில் உயிரோடு உமிழச் செய்த அற்புதப்பிறவி! நமக்கு நாயன்மார்களின் வரலாற்றுக் குறிப்பைக் கொடுத்தவர்.
பரவை நாச்சியார் என்ற தேவதாசி மாதுவையும் சங்கிலி நாச்சியார் என்ற தொழிற்குல வேளாளர் பெண்ணையும் மணந்தவர். இறைவா சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது சென்றார். பொய் சொன்ன காரணத்தால் இரு கண்களையம் இழந்தார். இறைவரிடம் மன்றாடி மீண்டும் கண்களைப் பெற்றார். திருவாரூரில் அன்னதானம் தினசரி நிகழ்த்தியவர். 18 வயதிலேயயே வாழ்வின் உண்மையைப் புரிந்து இறைவனோடு ஐக்கியமாக விரும்பினார் சிவன் வௌ“ளையானை அனுப்பி அழைத்துக் கொண்டார். தொழிலின் அடிப்படையிலேயே குலம் தோன்றியதென்பதும் திருமணத்திற்கு தொழிற்குலம் தடையில்லையென்பதும் இறைவரிடம் கசிந்தால் அவர் அருள்வார் என்பதும் இவர் வாழ்க்கையின் மூலம் நமக்குப் புலப்படுகிறது.
தில்லைவாழ் அந்தணர் : ஒழுக்க நெறியோடு வேத முடிவான ஈசனை மட்டுமே ஓதி, உணர்“ந்து, ஓதுவித்த அந்தணர்கள் 3000 பேர். திருநீலகண்டர் நாயனார் : குயவத்தொழிற்குலம் ஈசனே இறையோன் என்ற கொள்கையர், அடியார்கட்கு திருவோடு கொடுப்பார். மனைவியோடு பிணக்குற்று, மையல் கொள்ளாது, இளமை தொலைந்து முதுமைவரை மனைவியிடத்து அன்பு மாறாதவர். ஈசன் பின்னாளில் இவர்களது அன்பைப் பாராட்டி இளமையைக் கொடுத்தார்.
இயற்பகை நாயனார் : செட்டியார் தொழிற்குலம் சிவனடியார்க்கு இல்லையென்னாது எதையும் வாரி வழங்கியவர். தூய சிந்தையோடு சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு தன் மனைவியையும் கொடுத்தார். அடியாரும் மறைந்து விட்டார். இருவருக்கும் இறைவன் காட்சி தந்தார்.
இளையான்குடி மாற நாயனார் : தொழிற்குல வேளாளர், தன் வறுமையிலும் சிவனடியார்கட்கு உணவளித்தவர். விதைத்த நெல்லை அவலாக்கி சமைத்து அடியார் வேடத்திலிருந்த ஈசனுக்கு அன்ன அமுதூட்டி இறைக்காட்சியும் மாட்சியும் பெற்றார். இம்மையிலும் மறுமையிலும் நம்மை காப்போன் ஈசன்.
மெய்ப்பொருள் நாயனார் : தொழிற்குல உடையார் திருக்கோயிலரை தலைநகராகக் கொண்ட சேதி நாட்டரசன், சைவத்தலங்களில் வழிபாடுகள் ஏழிசையோடும் வேத ஆகம நெறியோடும் நடைபெறுவதில் கவனம் செலுத்தியவர். அடியார்க்கு அன்பன் பகைவர்க்கு எமன். இவரை போரில் வெல்ல இயலாத வேற்று சமுதாயப் பகைவன் முத்து நாதன் சிவதவவேடமிட்டு அரசரை தனிமைப்படுத்தி வஞ்சனையால் கொன்றான். மெய்காப்பாளன் அவனைக் கொல்ல முற்பட, தடுத்து நிறுத்தி, பகைவனுக்குக் காவலாக நாட்டு எல்லைவரை துணைக்கனுப்பி. அமைச்சர், இளவரசர்கட்கு “விபூதி அணிந்தவர்களிடத்து தான் வைத்த அன்பைச் சோர்வின்றி பாதுகாக்க” என உறுதி கூறினார். ஈசன் காட்சி தந்து சிவபுரத்தில் தம் நீழலில் நீங்கா இடமளித்தார். (நாம் இன்னும் சாதிச் சண்டையில் மூழ்கியே பொது எதிரியை வளாக்கின்றோம்.)
விறல்மிண்ட நாயனார் : கேரளம் , தொழிற்குலப் பிள்ளைமார் சிவனடியார்களை வணங்கி சேவை செய்தபிறகே ஈசனை வணங்கச் செல்வார். திருவாரூர் வந்த சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்களைக் கவனிக்காது நேரடியாக இறைவரை வழிபட சென்றதால், அவரையும், இறைவரின் அணுக்கத் தொண்டர் என்பதால் இறைவரையும் “புறம்பானவர்கள்” என ஒதுக்கினார், சுந்தரர் மன்னிப்பு கேட்டார்.
பிறகு சுந்தரர் “திருத்தொண்டர் தொகையை” எழுதி நமக்கெல்லாம் சிவத்தொண்டர்களின் பெருமையை அறியச் செய்தார். பின்னர் சுந்தரரிடம் நட்பு ஏற்பட்டு சிவத்தொண்டு புரிந்து சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். சிவகணங்களின் தலைவரானார். நாமும் நெற்றி நிறைய திருநீறு பூசிய சிவனடியர்களை வணங்கி இறைவனாக வழிபடுவோமாக. நேரே கருவறை நோக்கி செல்லாதீர்.
அமர்நீதி நாயனார் : தொழிற்குல நெசவாளர் பழையாறை (கும்பகோணம் அருகே) யில் பிறந்தவர் சிவனடியார்களுக்கு கோவணம், வேட்டி, துண்டு ஆகியவற்றை வழங்கி மகிழ்பவர். ஒருநாள் ஈசனார் சிவனடியார் போல் வந்து தன்னிடமிருந்த கோவணத்தை பாதுகாப்பாக வை, குளித்துவிட்டு வருகிறேன் எனக் கூறி, பின் திரும்பி வந்துகேட்க அது அங்கே இல்லாதுபோக, தனது கோவண எடைக்கு நிகராக கோவணங்கொடு என அடியார் கூற தராசு நிகராகாமல் தன்செல்வம், மனைவி,மக்கள், தானும் ஏறி தராசில் அமர நிகரானது. இறைவன் மறைந்தார். இறுதி நாளில் அமர்நீதி நாயனார் சிவபுரம் அடைந்தார். அன்பே சிவம். எனவே நமது தொழிலை செய்து கொண்டு இறைத்தொண்டு செய்தாலும் வீடுபேறு கொடுப்பார் சிவன்.
எறிபத்தர் நாயனார் : கரூர் சிற்றரசர், ஒருமுறை சோழப்பேரரசின் பட்டதுதுயானைவேறோரு சிவனடியாரை தாக்கி பூஜை மலர்களை சிதறியடித்ததை எறிபத்தர் கேள்விப்பட்டு யானையையும் பாகனையும் கொன்றார். சோழ மன்னர் வந்து விசாரிக்க நெறிதவறாத எறிபத்தரிடம் மன்னிப்புக் “கேட்டு தன்னை கொல்லுமாறு உடைவாளை கொடுக்க எறிபத்தர் அவ்வாளால் தன்னை மாய்க்கத்துணியும் போது, அரசன் தடுத்தான். ஈசனார் காட்சி தந்தார். பண்பே சிவம்.
ஏனாதி நாயனார் : சோழநாட்டு எயினூர். தொழிற்குல நாடார் சிறந்த சிவனடியார். அரசகுமாரர்கட்கு போர்ப்பயிற்சியளிப்பவர். வேறு சமுதாய அதிசூரன் அவர்மீது பொறாமை கொண்டு சண்டையிட்டு தோற்றபின், நெற்றி நிறைய திருநீறு பூசி போருக்கு வர, இவர் போரைமறுக்க ஆதிசூரன் , ஏனாதி நாதனாரைக் கொன்றான். இறைவா தனது திருவடி நிழலில் இடமளித்தார்.
கண்ணப்பர் நாயனார் : திண்ணப்பன் என்ற கண்ணப்பர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகேயுள்ள முத்தரையர் குலத்தை சேர்ந்த இளவரசர். தினைத் தோட்டங்களையும் சோலைகளையும் பாதுகாக்கும் பொறுப்பாளர். அப்பணியில் வேட்டையாடச் செல்ல, மலை உச்சியிலுள்ள குடுமித் தேவனார் எனும் திருப்பெயர் கொண்ட ஈசனின்பால் ஈர்க்கப்பட்டு அக்கருவறையிலல் புகுந்து குழந்தையை கொஞ்சும் போது கட்டிப்பிடித்து முத்தமிட்டு சிவப்பித்தால் காவல் பொறுப்பை மறந்து இறைச்சியை ஈசனுக்கு உணவாகக் கொடுத்தார். இறைவர் ஏற்றுக் கொண்டார் இறைவா கண்ணில் ரத்தம் வரக் கண்டு தனது கண்ணையே ஈந்தவர் இறைவரால் “கண்ணப்பா“ என அழைக்கப்பட்டு சிவனருள் பெற்றார். எனவே சிவழிபாட்டில் உணவைவிட உணர்வே முக்கியம் என்பது தெளிவாகிறது. அன்பே சிவம். பிறபிராணிகளின் உறுப்புக்களை வெட்டிச் சுட்டு சிவனுக்குப் படைத்ததார். எனவே சிவன் திண்ணனாரிடம் இவரது உறுப்பான கண்ணைக் கேட்டார். அதையும் அவர் கொடுத்ததால் நாயனார் ஆனார்.
குங்குலயக்கலயர் நாயனார் : தொழிற்குல வேதியர், திருக்கடவூரில் பிறந்தார். இறைவனுக்கு தன் வறுமையிலும் தொடர்ந்து குங்கிலியம் எனும் தூபப் பொருளை கொடுத்துவந்தவர். மனைவியின் தாலியையும் விற்று குங்கிலியம் வாங்கி இறைவர்க்குச் சமர்ப்பித்தார். வீட்டிற்குச் செல்லாமல் கோவிலில் தூங்கினார் மனைவி, மக்கள், உறவினர் பசியில் வாடினர். இறைவர் அவர்கள் வீட்டில் செல்வத்தை வைத்தார். வறுமை நீங்கியது. திருப்பனந்தாள் இறைவரின் சாய்ந்த லிங்கத் திருமேனியை யானைகள் பலமுயன்றும் நேராக்க முடியாததை அன்பெனும் கயிற்றைக் கட்டி இழுத்து நிமிர்த்தினார். இறைத் தொண்டு செய்யச் செய்ய நமக்கு செல்வம் பெருகும் என்பது புலனாகிறது. இறைவர் அன்புக்கே கட்டுப்பட்டவர். அன்பே சிவம்.
மானக்கஞ்சாற நாயனார் : தொழிற்குல வேளாளர், கஞ்சானுர் பிறந்தவர். படைத்தளபதி தனது வருமானத்தை சிவனடியாருக்காக செலவு செய்தார். தனது மகளின் அழகான கூந்தலை அவளது மணநாளில் சிவனடியாரின் பூணுலுக்காக அரிந்தார். ஆனால் இறைவா சிறிது நேரத்தில் கூந்தலை வளரச் செய்தார். எனவே இறைத் தொண்டில் எவ்வளவு அவமானம் வந்தாலும் இறைவன் களைந்துவிட்டு துணைநிற்பார் என்பது திண்ணம்.
அரிவாட்டாய நாயனார் : தொழிற்குல முதலியார். ஊர் கணமங்கலம். தினமும் செந்நெல் அரிசிச் சோறும் செங்கீரையும் மாவடுவும் ஈசனுக்கு கோயிலில் படைப்பவர். வறுமையிலும் இது தொடாந்தது. மிகுந்த சிரமத்திற்கிடையே ஒருநாள் உணவு கொண்டு செல்ல. மண்வெடிப்பில் கால்சிக்கி உணுவும் வெடிப்பில் விழுந்தது. இனிமேலும் நாம் உயிர் வாழ்வது வீண் என எண்ணி கதிர் அரிவாளால் தன்“ கழுத்தை வெட்ட எடுக்கும் போது மண்வெடிப்பினுள்ளே இருந்து “நிறுத்து” என குரல் கொடுத்து மாவடுவைகடிக்கும் சத்தத்தையும் கேட்கும்படி செய்து கைநீட்டித் தடுத்தார் ஈசன். (அக்காலத்தில் கோயிலுக்கு யார் வீட்டிலிருந்தும் நைவேத்யம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என தெரிகிறது) அன்பே சிவம்.
ஆனாய நாயனார் : கோனார் தொழிற்குலம் (யாதவர்). ஊர் மழநாட்டு மங்கலம். நெற்றியிலும் மார்பிலும் திருநீறுபூசி மாடுமேய்ப்பவர் நல்ல இசை@யாடு நமசிவாய மந்திரத்தை புல்லாங்குழலில் வாசிப்பவர். ஒருநாள் மழைக்காலம் கொன்றைமரம் பூத்துக்குலுங்கி சிவனாக காட்சி தந்தது. இசையோடு குழல்வாசித்தார்.
அத்தனைவுயிரினங்களும் தன்னை மறந்து இவரிடம் வந்து சேர்ந்தன ( தேவர்கள் உட்பட) இதை ரசித்த இறைவா பின்னாளில் தம் சிலோகத்தில் ஓர் இடம் கொடுத்தார். யாகம் மந்திரம், தவம் செய்யாமல்“நமசிவாய திருவைந்தெழுத்தினை உள்ளம் உருக ஓதினால் இறைவர் நம்மை ஆட்கொள்வார் என்பது உறுதி. அன்பே சிவம்.
மூர்த்தி நாயனார் : மதுரை செட்டியார் தொழிற்குலம், தினமும் இறைவர்க்கு திருமஞ்சனத்திற்கு சந்தனம் கொடுப்பவர். பாண்டியநாட்டை, கன்னட கடவுள் மறுப்பாளர்கள் ஆண்டகாலம். மன்னன் சந்தனம் விற்க, வெட்ட தடை செய்தான். நாயனார், தன் முழங்கையைச் சந்தனக் கட்டையாகக் கருதி கல்லில் தேய்த்தார் மன்னன் ஒழிய ஈசனை பிரார்த்தனை செய்ய, மறுநாள் மன்னன் மடிந்தான், அரசானானார், சைவம் தழைத்தது. எனவே சைவம் தழைக்க மனம் பொருள் மட்டுமல்லாது ஒருமையோடு உழைத்தல் வேண்டும். அரசின் இடையுறு இருந்தால் ஆன்மிகம் வளராது என்பது புலனாகிறது. உறுதியே சைவம்.
முருக நாயனார் : திருப்புகலூர் தொழிற்குல ஐயா சமுதாயம். தினம் அதிகாலை எழுந்து நீராடி பலவிதமான நறுமண பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து எந்நேரமும் நாவில் நமசிவாய மந்திரம் முணுமுணுப்பவர். திருஞானசம்பந்தரின் அடியார் திருக்கூட்டத்தில் இவரையும் ஏற்றுக் கொண்டார். சைவ சமயத்தை நிலை பெறச் செய்யும் தவைர்கட்கு உறுதுணையாக இருத்தல் இறைவனுக்கு பிடிக்கும் என விளங்குகிறது எனவே நாமும், உண்மையாக இறைவனுக்கு இருப்போம்.
உருத்திரபசுபதி நாயனார் : திருத்தலையூர், ஐயர் தொழிற்குலம். தினமும் அதிகாலையில் வேதத்தின் மைய பகுதியாய் விளங்கும் “ஸ்ரீருத்ரத்தை” கழுத்தளவு நீரில் நின்று ஓதினார் இறைவர் இவரைத் தம் அருகே இருக்க வைத்தார்.
திருநாளைப் போவார் (நந்தனார்) நாயனார் : ஆதனூர் தொழிற்குல புலையர், அரசு கொடுத்த மானிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு, தோலால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை சிவபெருமான் கோவிலுக்கு கொடுத்து வந்தார். தாம் இறந்து போன மாட்டிறைச்சியை உண்கின்ற சமுதாயத்தில் பிறந்தோமென தாழ்நிலை சிந்தனை காரணமாக (இன்றும் நாம் இறைச்சி உண்ட நாட்களில் கோயிலுக்குள் செல்வதில்லை) கோயிலுக்கு வெளியிலே நின்று தரிசனம் செய்ய இறைவர் அவரது அன்பை மெச்சி திருப்புன்கூர் ஈஸ்வரர் நந்தியை விலகச் செய்தார். நந்தனாரிடமிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கவும் நந்தனாரின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஈசனார் உள்ளம் கனிந்து தில்லை அந்தணர்களிடம் கனவில் விளக்கிக் கூறி அவரை அழைத்துவர அனுப்புகிறார். அதை நந்தனாரை அணுகி “ஐயரே” என அடிபணிந்து அழைத்து வந்தனர். பின் நந்தனார் ”நான் புனிதனானேன்” என மகிழ்ந்து வேள்வித்தீயில் இறங்கி வெளிவந்து தில்லை அந்தணர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து வணங்கும் பெருமை பெற்று பொன்னம்பலத்திற்குள் மனித உருவில் நுழைந்து இறைவரிடம் ஐக்கியமான முதல் மகாத்மா, மனிதக்குலத்தின் தலைவர் ஆவார். எனவே நம்மிடமுள்ள தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்து இறைப்பணி செய்வோம்.
திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் : காஞ்சிபுரம், வண்ணார் தொழிற்குலத்தில் பிறந்தவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். துணிகளை வெளுத்தும் கொடுப்பவர். ஒருநாள் மழைக் காலம் அடியார் போல் வந்து ஈசன் இவரை சந்திக்க, நாயனார் அவரது துணியை வெளுத்துத் தர ஆசைப்படுகிறார். அடாது மழைவிடாது பொழிய துணி உலரவில்லை. தனது வாக்குப் பொய்த்ததால் கல்லில் மோதுகிறார் தற்கொலை செய்ய முயல ஈசன் தனது திருக்கரத்தால் தடுத்து நிறுத்தி நீ என் பேரின்ப உலகில் வாழ்க என அருள் செய்தார். அன்பே சிவம்.
சண்டேசர் நாயனார் : சேய்ஞலூர் தொழிற்குல வைதீக சமூகம். இயற்பெயர் விசாரசருமர் இடையர் தமது ஊர் பசுக்களை அன்போடு மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லாததால் “அப்பொறுப்பை தனதாக்கி, பசுக்கள் அன்பால் தாமாகச் சொரியும் பாலை ஆற்றங்கரையில் மணலினால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிசேகம் தினம் செய்ய, அதையறிந்த தந்தை பாற்குடத்தை உதைத்தார். உதைத்த காலை நாயனார் வெட்டினார். இறைவா தந்தையென பாராது என்பால்“ அன்பு கொண்டு தந்தையையும் தண்டித்தாய் நீ என்று சண்டேசர் பட்டம் வழங்கி, ஈசன் உமாதேவியுடன் காட்சி தந்து சிவாரசருமரை தன் மார்போடு அணைத்துத் தழுவி இனிமேல் நாமே உனக்கு தந்தையாகினோம்“. என்றார். இசன் சிவபுரத்தில் இடமளித்தார். எந்த அடியார்களுக்கும் கிடைக்காத பெருமை அனைத்து சிவாலயங்களிலும் தனிச் சன்னதி சண்டேஸ்வரருக்கே கிடைத்தது. சிவபூஜையில் இடைஞ்சல் செய்பவர்களைத் தண்டித்தால்“ பாவமில்லை எனவும், ஆகமத்தைவிட அன்பே உயர்ந்தது என்பதும் தெளிவு.
திருநாவுக்கரசர் நாயனார் : பண்ருட்டி அருகே திருவாமூர் வேளாளர் தொழிற்குலம் (உற்பத்தியாளர்கள்) சமணத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு ”தரும சேனன்” எனப்பட்டம் பெற்றார். அக்காள் திலகவதியார் கவலையுற்று ஈசனிடம் முறையிட சூலைநோய் தருமசேனருக்கு ஏற்பட்டு ஈசனால் குணமடைந்தார். தாய்மதம் திரும்பினார். ”நாவரசு” என இறைவரால் பட்டம் பெற்றார். மனம், வாக்கு, செயல் என மூன்றாலும் இறைப்பணி செய்தார். சமணர்கள் பல்லவ அரசிடம் தவறான தகவல் கொடுக்க அவரை 7 நாட்கள் சுண்ணாம்பு காளவாயிலில் அடைத்தனர் மீண்டார். விஷம் கொடுத்து யானையை ஏவி கொல்ல முயன்றனர் யானை திரும்பிச் சென்றது மீண்டார். கல்லோடு கட்டி வங்கக் கடலில் வீசினர். மிதந்தார் கரையேறினார். அன்று முதல் அவ்விடம் கரையேறிய குப்பம் என்றழைக்கப்படுகிறது. மரணத்தை வென்ற திருநாவுக்கரசர் காலில் மன்னன் விழுந்தான். சீர்காழியில் ஞானசம்பந்தரை சந்திக்க அவர் “அப்பரே” என திருவாய் மலர்ந்தார். திங்களுரில் அப்பூதி அடிகளின் மகனை உயிர்பிழைக்கச் செய்தார். அப்பரும். ஞானசம்பந்தரும் வேதாரண்யத்தில் ஈசனார் கோயில் கதவு திறக்க பதிகம் பாடினர் திறந்தது கதவு பழையாறையில் கோயிலில் சிவலிங்கம் சமணர்களால் அகற்றப்பட்டுள்ளதைக் கண்டு உண்ணா விரதமிருந்து மீண்டும் கோயிலை மன்னனால் உருவாக்க வைத்தார். திருப்புந்துருத்தியில் மடம் அமைத்தார். மதுரையில் சைவத்தை நிலைநாட்டிவிட்டு அவரைக் காண திருஞானசம்பந்தர் வர, அந்திநேரம், அப்பர் யாருக்கும் தெரியாமல் அவரது பல்லக்கை அமையாளரோடு சேர்ந்து சுமந்தார். ஊரின் அருகே வந்து அப்பர் எங்கேயிருக்கிறார் என மற்றோருடன் கேட்க, அப்பர். “அடியேன் இங்குற்றேன்” என கூறினர் ஒருவரை ஒருவர் காலில் விழுந்து வணங்கினர். ஈசனின் திருக்கயிலாய்க் காட்சியை காண நடந்தும் ஊர்ந்தும் செல்ல உடம் பெல்லாம் தேய்ந்து புண்ணாகியது, முனிவராக வந்த ஈசன் பின் அசரீரியாக ” இந்த பெரிய பொய்கையில் மூழ்கி திருவையாறு பொய்கையில் எழுவாயாக” என சொல்ல அதே போல் நாயனார் முழுகி திருவையாற்றில் பொய்கையில் எழுந்தார். அங்கே வடகயிலைக் காட்சியைக் கண்டார். வாழ்நாள் இறுதி வரை உழவாரப் பணி செய்து இறைபதமடைந்தார்.
(மனம், வாக்கு, செயல் இம்மூன்றும் ஈசன் பால் வைப்பவருக்கு ஈசன் துணை நிற்பார் என்பதும் ஈசனடியார்களுக்குள் அகங்காரமில்லா பிணைப்பு வேண்டும் என்பதும் நமக்குத் தெரிய வருகிறது அநீதிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மகாத்மாகாந்திக்கு வழிகாட்டியவர் அப்பரே)
குலச்சிறை நாயனார் : பாண்டிய நாட்டு மணமேற்குடியில் பிறந்தார் சிவனடியார் யாராக இருப்பினும் பணிந்து பணி செய்வார். சமணர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுக்க. ஞானசம்பந்தருக்கும், அரசி மங்கையர்க்கரசிக்கும் துணை நின்ற அமைச்சர் பெருமகனார். சுந்தரரால் “பெருநம்” யென புகழப்பட்டவர். உணர்வே சைவம்.
பெருமிழலைக்குறும்பர் நாயனார் : குறும்பநாட்டு குறும்பர் குல குறுநிலமன்னன் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தொண்டர். அட்டமாசித்தி பெற்றவர். சுந்தரர் கயிலை செல்வதையோக நெறிமூலம் முன்னேயறிந்து கபாலத்தைப் பிரணவத்தால் திறந்து சுந்தரருக்கு முன்னர் கைலாயத்தை அடைந்தவர். அன்பே சிவம்.
காரைக்காலம்மையார் : காரைக்கால் ஊர், செட்டியார் குலம் இயற்பெயர் புனிதவதி, மீளா இறையன்பு கொண்டவர். கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனியொன்றை பிச்சைகொடுத்தார். ஆனால் கணவன் சாப்பிடும்போது தான் கொடுத்தனுப்பிய இரண்டு பழத்தையும் கொண்டு வரக் கேட்க, இறையருளால் அதைப் பெற்றார். புதிய மாங்கனி மிகுந்த சுவைமிக்கதாகக் கண்ட கணவர் இவரது தெய்வத்தன்மையைக் கண்டு அஞ்சி விலகுகிறார். அம்மையார் இறைத்தொண்டில் ஈடுபாடுகாட்டி திருக்கயிலாயம் செல்ல பேயாக மாறுகிறார். இறைவனால் அம்மை என அழைக்கப்பெற்று இறைவரின் ஆணைப்படி திருவாலங்காட்டில் ஈசன் ஆடும் திருநடனத்திற்கு பாடிய வண்ணம் இன்றும் என்றும் இருக்கலானார். நாமும் அம்மையாரோடு அமர்ந்து அநுபூதி பெறுவோம்.
அப்பூதி அடிகள் : திங்களுரில் பிறந்த அந்தணர் தாம் செய்த அறச் செயலக்கும், மக்களுக்கும், பசுக்களுக்கும் திருநாவுக்கரசர் பெயர்களையே சூட்டி மகிழ்ந்தார். அவ்வூரின் வழியே வந்த நாவரசர் இதைக் கண்டித்து அப்பூதி அடிகளாரிடம் நீர் செய்யும் நற்ச்செயலுக்கு வேறு எவர் பெயரையோ சூட்டக் காரணம் என்ன? எனக் கேட்க கோபமுற்ற அப்பூதியார் சதிகார சமணரைவென்ற மகா புருஷனை “எவரோ” என ஒருமையில் பேசியதை கடிந்து. பின் அவரே இவரென அறிந்து மண்டியிட்டார் கட்டித்தழுவினர். இங்கு எங்கே தீண்டாமை? அப்பூதியாரின் இறந்த மகனை உயிர் தெழச் செய்தார்.
திருநீலநக்கர் நாயனார் : ஊர் சாத்தமங்கை தொழிற்குல ஐயர், தினமும் அதிகாலையில் வீட்டில் வேள்வியும், சிவனடியார்கட்கு உபசரிப்பும் நாயனார் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லாதவராததலால் உட்பிரஹார பரார்த்தலிங்கத் திருமேனிக்குத் தினமும் மாலையில் திருவைந்தெழுந்தோடு மலர் அர்ச்சனை மனைவியின் துணையோடு செய்தார்.