ஸ்ரீரங்கத்திற்கும் முன்பாக தோன்றியதாக கருதப்படும் திருவெள்ளறை திவ்ய தேசம் திருச்சி – துறையூர் சாலையில் அமைந்துள்ளது. அயோத்தி மன்னன் சிபிச் சக்கரவர்த்தி இங்கு தமது படைகளுடன் தங்கி இருந்த போது, வெள்ளைப் பன்றி ஒன்று ஓடிச்சென்று ஒரு புற்றுக்குள் மறைந்ததைப் பார்த்தார். மார்க்கண்டேய ரிஷியின் வழிகாட்டுதல் படி அந்தப் புற்றுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, ஸ்ரீ புண்டரிகாக்ஷ பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) எழுந்தருளினார். தாயார் திருநாமம் பங்கஜவல்லி. ஏழு தீர்த்தங்கள் இக்கோயிலில் உள்ளன. வைணவ ஆசார்யர்கள் பலர் அவதரித்த திருத்தலம் இது. ஸ்ரீ உய்யக்கொண்டார் இங்குதான் திருநாடு எழுந்தருளினார். திருவெள்ளறையில் பங்குனி பிரம்மோற்சவம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை 7.30 மணிக்கு இரவு கருடசேவை நடைபெற்றது. ஏப்ரல் 4-ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
Related Posts
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தெப்ப உற்சவம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மிகப் பெரிய கோவிலில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி 12 அடி (3.7 மீ) உயரத்தில் கம்பீரமாக சேவை சாதிக்கிறார். தாயார் திருநாமம் செங்கமலத்தாயார்.…
திருநீர்மலை அரங்கநாதருக்கு தேர்த் திருவிழா
மாமலையாவது திருநீர்மலையே என்று சுவாமி திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற வைணவ திருத்தலம் திருநீர்மலை. சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்து அமைந்துள்ள இத்தலத்தில் மலைக்கோவிலில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும்,…
திருக்குறுங்குடி திருத்தேர் விழா…
திருக்குறுங்குடி , திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக…