ஆழ்வார்களில் பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ஆகிய நான்கு ஆழ்வார்களால் 40 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் திருக்குறுங்குடி. திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.
அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார் தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின்
நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற, அவ்விதமே தெற்கு வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்தார் . இங்கும் எம்பெருமானுக்கு பல
நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட, அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். வைகுண்டம் இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருப்பதாக சொல்வழக்கு உண்டு. இத்தலத்தில் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தில் ஐந்து நம்பிகளும், ஐந்து கருட வாகனங்களில் சேவை சாதிப்பதை தரிசிக்கலாம்.