பக்தி, ஞானம், பெரும் செல்வத்தையும் அளிப்பவர் கேது பகவான்.. யாருக்கு?

ஆன்மீகத்தில் மட்டுமல்ல ஆத்மார்த்தமான உறவுகளை புரிய வைப்பவர் கேது . தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் முகமூடியை கழட்டி வைத்து உண்மை நிலையை புரிய வைப்பவர் கேது. அதனால்தான் கேது தசை புக்தி நடக்கும் காலங்களில் ஒரு மனிதனுக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் விரக்தி ஏற்படுகிறது. அதாவது, வாழ்வின் நிலையாமை தத்துவத்தை மனிதனுக்கு உணர்த்துவார்.

நாம் வாழும் இந்த வாழ்க்கை எதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கேது தசை அல்லது புக்தி காலங்களில் ஒரு நிமிடமாவது நாம் யோசிப்போம்.

வேலை மாற்றம், வீடு மாற்றம், அல்லது வண்டி வாகன மாற்றம்  என மாறுதல்கள் கண்ணுக்குப் புலப்படும்.

குடும்ப உறவு, நட்பு என ஒவ்வொரு மனிதரின் மாற்றத்தையும் புரிய வைப்பவர் கேது பகவான்.

கேது பாகவான், அதீத ஆன்மீக எண்ணத்திற்கு மட்டுமல்ல அதீத காமத்திற்கும் அதிபதி. காமத்தின் உச்சம் ராகு என்றால் அந்த உச்ச நிலையில் தன் நிலை மறக்க வைப்பவர் கேது.

மனித உடலில் கழிவுகளை வெளித்தள்ளுதல் கேது. உமிழ்நீர், மலம் சிறுநீர், வெளித்தள்ளுதல் ஆகிய செயல்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உள்பட்டது.

விந்து வெளித்தள்ளுதல் மற்றும் குழந்தை வெளியில் வருவது கேதுவின் செயலுக்கு உட்பட்டது. எனவே, கேதுவின் துணை இல்லாமல்  வாரிசு என்பது இல்லை.

ஒருவரை பக்தி மார்க்கத்திற்கும், ஞான மார்க்கத்திற்கும் அழைத்துச் செல்பவர் கேதுவே, அதற்கான விதை அவருடைய புக்தி காலங்களில் நிச்சயம் உணர்த்துவார். நாம்தான் அதை உணர வேண்டும்.

கேது பகவான், ஞானத்தை மட்டுமல்ல, சகல சம்பத்து யோகத்தையும் கொடுக்க வல்லவர். கேது தசை அல்லது புத்திக் காலங்களில் ஒருவருக்கு கிடைக்கும் பொருள், வருமானம் சொத்துக்கள் வேறு எந்த திசையிலும் பறிக்க இயலாததாகும்.

மனித உடலில் ஆசன வாய் பகுதி கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பது. கேது தசாபுக்தி காலங்களில் முதலில், மலச்சிக்கல் போன்ற பிரதான பிரச்னையை ஏற்படும்.

அறிவியலாக இதை ஆராய்ந்தால், எந்த ஒரு தனிமனிதனும் மனதளவில் விரக்தியும் வேதனையும் இருக்கும் நேரங்களில் மட்டுமே மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உருவாகும். (கேது தசை காலத்தில் ஜோதிடரீதியாக மனிதருக்கு Mental pressure உருவாவதால் ஆசன வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்)

கேது தசை புக்தி காலங்களில்,  பறவைகளுக்கு உணவு, பசுக்களுக்கு உணவு, நீர் போன்றவை கிடைக்குமாறு செய்தல், சித்தர்கள் வழிபாடு, விநாயகர் வழிபாடு போன்றவை நன்மை தரும்.

Navamani
ஜோதிட பேராசான் புலவர் நவமணி சண்முக வேலு.

 

-ஜோதிட பேராசான் புலவர் நவமணி சண்முக வேலு 94431 46912

கொடுத்தது உண்மையான ஜாதகம் தான் என்று கண்டுபிடிக்கணும்! | வாஸ்து சாம்ராட் புலவர். நவமணி சண்முக வேலு

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *