ஸ்ரீ ருத்ர மந்திரம் கேட்டாலே அனைத்தையும் வழங்குவான் சிவன்

சிவ வழிபாடு

சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும்விளங்குகிறது.
ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்ர ஜபத்தால் எல்லா தேவதைகளும்த்ருப்தியடைகின்றார்கள். ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகின்றான். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான்.
இத்தகைய அதிஉன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது மிக உன்னத பலனை தரவல்லது.
பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.
என்ன வேண்டிக் கொள்வதென தெரியாதவர்கள் ருத்ர பாராயணம் செய்தாலே கேட்டாலோ வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனையும் கிடைத்து விடும் என சொல்லப்படுகிறது. கேட்காமலேயே நமக்கு தேவையான அனைத்தையும், அதற்கு மேலாகவும் செய்ய இறைவன் நம்முடனேயே காத்துக் கொண்டிருக்கிறான் என வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூக்கம் துவங்கி, செல்வம் வரை அனைத்தும் கேட்பதாக இதில் உள்ள ஸ்லோகங்கள் குறிப்பிடுகின்றன.
யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ
பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். மந்திர ஜபங்களில் ருத்ர ஜபம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், சிவனின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும் என்பார்கள். எத்தனை மந்திரங்கள் இருந்தாலும் ருத்ர ஜபத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு மகத்துவம், ருத்ர ஜபம் செய்தால் அனைத்தும் கிடைத்து விடும்.
ருத்ரம் என்பது நமகம், சமகம் என இரு பகுதிகளை உடையது. இது முக்கியமான வேண்டுதலல் என்னவென்றால் நல்ல தூக்கத்தை கொடு என இறைவனை வேண்டுவதாகும். மனிதர்கள் பலவிதமாக கவலைகளால் அவதிப்படுவார்கள் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நமது முன்னோர்கள் சமகம் என்னும் பகுதியில் இறைவனிடம் என்ன எல்லாம் வேண்டலாம் என பட்டியல் இட்டுள்ளார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் துதிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்றும் அழைக்கிறார்கள். சமகம் என்னும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இறைவனிடம் கேட்டாலே நமக்கு அனைத்தும் கிடைத்துவிடும். அதனால் தான் சிவாலயங்களில் அபிஷேகத்தின் போது ருத்ர பாராயணம் செய்யப்படுகிறது. இந்துக்களின் முக்கிய சடங்குகளிலும் ருத்ர பாராயணம் செய்யப்படும்.
வசதிகள், செல்வ செழிப்பு, இகவாழ்க்கை நலன்கள், உணவு மற்றும் விவசாய நலன்கள், பூமி, குடியிருப்பு, பரம்பரை செல்வம், அனைத்து தேவதைகளும் அருளை பொழிய, அனைத்து கிரக தேவதைகளும் அருளை தர, யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் அமைய, யாக தேவதைகளின் அருளும், மந்திர ஞானமும் பெற உள்ளிட்ட அனைத்து நலன்களையும் தர வேண்டும் என ஒவ்வொரு ஸ்லோகமும் ஒவ்வொரு வேண்டுதலை முன்வைப்பதாக உள்ளது. இறுதியாக இந்த ஸ்லோகங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் சொற் பிழை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் பொருத்துக் கொண்டு, அனைத்திலும் இனிமையே நிறைய, நலம் தந்தருள வேண்டும் என்று சமகம் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால், அதை மட்டும் சத்தமாக உச்சரிப்பார்கள். மரண பயத்தை போக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் வருகிறது.

ருத்ரத்தில் மகிமையை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. வேதத்திற்கு தாயானாலும், அந்த வேத நாயகனான பரமேஸ்வரனை ஓரளவிற்கு மட்டுமே அடையாளம் காட்ட முடியும். வேதத்தை முழுமையாக துதிக்கும் போது அவன் அனைத்தையும் வழங்குகிறான் என்பதே வேதங்களின் அடிப்படையாகும்.
ஈசன் எங்கெல்லாம் இருக்கிறான், எந்தெந்த வடிவங்களில் எல்லாம் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையும் ஸ்ரீ ருத்ரம் தருகிறது.
பக்தனை காப்பதற்காக அவன் உடனேயே இருக்கிறேன் என்று இறைவன் கூறுவதாகவும், இன்னும் உனக்காக வேறு ஏதாவது செய்ய வேண்டுமா, அதையும் செய்கிறேன் என கேட்டு காத்திருப்பதாக ருத்ரம் சொல்கிறது. தனது பக்தன் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டு மன்னிப்பும் வழங்குகிறான் என்பதை ஸஹமானாய என குறிப்பிடுகிறது வேதம்.

இத்தனை மகிமை வாய்ந்ததாலேயே ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவர் சிவனாகவே ஆகி விடுகிறார், இறுதியில் சிவ பதத்தை அடைவார் என்கிறது வேதம்.

ருத்ர மந்திரம் கேட்டால் கிடைக்கும் பலன்கள் …
பாவங்கள் நீங்கும்: ருத்ர மந்திரம் பாவங்களைப் போக்கக்கூடியது.
செல்வம் பெருகும்: ருத்ர மந்திரம் செல்வத்தை வளர்க்கக்கூடியது.
நோய்கள் நீங்கும்: ருத்ர மந்திரம் நோய்களை குணப்படுத்தக்கூடியது.
கஷ்டங்கள் நீங்கும்: ருத்ர மந்திரம் கஷ்டங்களை நீக்கக்கூடியது.
மன அமைதி கிடைக்கும்: ருத்ர மந்திரம் மன அமைதியை வழங்கக்கூடியது.
சிவனின் அருள் கிடைக்கும்: ருத்ர மந்திரம் சிவபெருமானின் அருளைப் பெற உதவும்.

பக்தி: ருத்ர மந்திரத்தை கேட்பதோடு, சிவபெருமான் மீது பக்தி கொண்டிருப்பது முக்கியம்.
நம்பிக்கை: ருத்ர மந்திரத்தின் சக்தியில் நம்பிக்கை கொண்டிருப்பது முக்கியம்.
கவனம்: ருத்ர மந்திரத்தை கேட்கும்போது கவனம் சிதறாமல் இருப்பது முக்கியம்.
நல்லொழுக்கம்: ருத்ர மந்திரத்தை கேட்பவருக்கு நல்லொழுக்கம் அவசியம்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *