சகல செல்வங்களும் அருளும் “சிவ தாண்டவ ஸ்தோத்திரம்”

natarajar siva

“சிவ தாண்டவ ஸ்தோத்திரம்” என்ற பாடலுக்கு நடராஜர் ஆடிய பஞ்ச சகார சண்ட தாண்டவம்! என்கிற புராண நிகழ்வினை அறிவோம். நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், உன்மத்த தாண்டவம், காளிகா தாண்டவம் என்று பல வகையான தாண்டவங்களை ஆடியிருக்கிறார்.

பல்வேறு காலகட்டங்களில் பல காரணங்களுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ராவணனுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவம்தான்
“பஞ்ச சகார சண்ட நாட்டியம்” என்னும் தாண்டவமாகும்.

ராவணன் ஒரு மிகச் சிறந்த சிவபக்தன். மிகக் கடுமையாகத் தவமியற்றி எண்ணற்ற வரங்களைப் சிவனிடம் பெற்ற மாவீரன். சிவனிடம் பெற்ற வரத்தை நல்லமுறையில் பயன்படுத்தாமல், இந்திராதி தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற செருக்குடன் திரிந்த ராவணனைக்கண்டு அனைவரும் பயந்து நடுங்கினர்.

ஒருமுறை அவன் தனது புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஓர் இடத்தில் விமானம் மேலே செல்லமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. காரணம் புரியாமல் திகைத்த ராவணன் விமானத்தைவிட்டுக் கீழே இறங்கினான். அவனுக்கு எதிரில் தோன்றிய நந்திதேவர், ‘`ராவணா, எல்லா உயிர்களுக்கும் இறைவனாகிய சிவபெருமான் உறைகின்ற கயிலை மலையின் எதிரில் நீ நின்றுகொண்டிருக்கிறாய். தான் என்னும் அகந்தை கொண்ட உன்னால் இந்த மலையைத் தாண்டிச் செல்ல இயலாது. எனவே, நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ’’ என்றார்.

தானே மிகச் சிறந்த சிவபக்தன் என்ற ஆணவத்தில், ‘`குரங்கினைப்போல் தோன்றும் நீயா என்னைத் தடுத்து நிறுத்துவது?

சிறந்த சிவபக்தனான என் பராக்கிரமம் உனக்குத் தெரியாது, என்னை இழித்துப் பேசிய நீ யார்?’’ என்று கேட்டான்.

‘`ராவணா, என்னைக் குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் அழிந்து போவதற்கு ஒரு குரங்குதான் காரணமாக இருக்கும்’’ என்று நந்திதேவர் சாபம் கொடுத்தார்.

இதனால் மேலும் கோபம்கொண்ட ராவணன், தான் அனுதினமும் வழிபடும் ஈசன் உறையும் மலை என்றும் பாராமல், “இந்த மலையையே நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் பார்’’ என்று சபதம் செய்தவனாக,அந்த மலையை அடியோடு பெயர்த்தெடுக்க தன் ஒரு கையை மலையின் அடியில் கொடுத்து தூக்கத் தொடங்கினான்.

அவ்வளவுதான். இமயமே பூகம்பம் வந்ததுபோல் ஆடியது. இதைக்கண்ட சிவ பெருமான், தன்னுடைய பரம பக்தனாக இருந்தாலும், ராவணனின் அகந்தையை அடக்கத் நினைத்தார். தன் வலக்கால் பெருவிரலால் மலையின்மீது ஓர் அழுத்து அழுத்தினார். கயிலைச் சம நிலைக்கு வந்தது. ஆனால், சிவபெருமானின் கால் கட்டை விரல் வலிமைக்குக்கூட ஈடுகொடுக்க மாட்டாத ராவணன், மலையின் அடியில் சிக்கிக் கொண்டு வலி ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் கதறினான். இப்படியே அவனுடைய துன்ப நிலை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது.

அதன் பிறகே தான் இழைத்த பெரும் பிழையை உணர்ந்துகொண்ட ராவணன்,தன் பத்து தலைகளில் ஒரு தலையைக் கிள்ளிக் குடமாக்கி, ஒரு கையைத் துண்டாக்கி, அதன் நரம்பை வீணைத் தந்தியாகக்கொண்டு இனிய இசையைச் சாமகானமாகப் பொழிந்தான்.

சாமகான பிரியரான ஈசனை சாமகானம் இசைத்தே வசப்படுத்திவிட்டான் வீணைக்கொடியுடை வேந்தனான ராவணன். ஆம், அவனுடைய சாமகான இசையில் மயங்கிய சிவபெருமான் ராவணனை மன்னித்து விடுவித்தார். அவனுடைய இசைக்குப் பரிசாக சந்திரஹாசம் என்னும் ஒளி பொருந்திய வாளையும் அளித்தார்.

சிவபெருமானின் அருளைப்பெற்ற ராவணன், ‘`ஐயனே, என் அகந்தை அடக்கி ஆட்கொண்ட பரமனே!
நான் பாட, அதற்கேற்ப தாங்கள் திருநடனம் ஆடும் காட்சியை நான் தரிசிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தான்.

ஐயனும் இசைவு தெரிவித்தார். மனம்மகிழ்ந்த ராவணன், ‘மஹா பரமேஸ்வரனின் தலைவழியே சிந்தும் புனித கங்கை பூமியைப் புனிதமாக்குகிறாள்.அந்த புனித பூமியில் சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார்.அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது.

சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்’ என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது’ என்ற கருத்துடன் தொடங்கும் பாடலைப் பாட, அதன் தாளகதிக்கு ஏற்ப, சிவபெருமான் ‘பஞ்ச சகார சண்ட தாண்டவம்’ ஆடினார்.

இராவணன் பாடிய இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரப்பாடலைப் மகாசனிப்பிரதோஷ காலங்களில் பாராயணம் செய்பவர்களுக்கும், நித்திய பிரதோஷ காலங்களில் (சூரியன் அஸ்தமித்த பின்பு)
இப்பாடலைப் பாடித் துதித்து சிவ சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கும், இறைவன் தேர், யானை, குதிரையோடு (சகல செல்வங்களையும்) அருளுவான்.

லட்சுமி தேவியும் தன் திரு முகத்தைக் காட்டி அருள் புரிவாள். மஹாதேவனும் கேட்ட வரங்களை அருளுவான் . எனவே ராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்திரப் பாடல்களை எவரொருவர் பக்தியுடன் பாடுகிறாரோ அவருக்கு சிவபெருமானின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திரம் வரிகள்.

ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம் |
டமட் டமட் டமட்டமன் னினாதவட் டமர் வயம்
சகார ச்சண்ட தாண்டவம் தனோத்து னஃ ஷிவஃ ஷிவம் || 1 ||

ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமன் னிலிம்ப னிர்ஜரீ
விலோல வீச்சி வல்லரீ விராஜமான மூர்தனி |
தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட்ட பட்ட பாவகே
கிஷோர சந்த்ர ஸேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 ||

தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோதமான மானஸே |
க்றுபா கடாக்ஷ தோரணீ னிருத்த துர்த ராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 ||

ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே |
மதா ந்த ஸிந்துர ஸ்புரத் த்வக் உத்தரீய மேதுரே
மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி || 4 ||

ஸஹஸ்ர லோச்சன ப்ரப்றுத்ய ஸேஷ லேக சேகர
ப்ரஸூன தூளி தோரணீ விதூஸரா ம்க்ரி பீட பூஃ |
புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகரஃ || 5 ||

லலாட்ட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா
நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம் |
ஸுதா மயூக லேகயா விராஜமான சேகரம்
மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடாலம் அஸ்து னஃ || 6 ||

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வலத்
தனஞ்ஜயாம் ஹுதீ க்றுத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே |
தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனை (ஏ)க ஸில்பினி த்ரிலோச்சனே மதிர் மம || 7 ||

நவீன மேக மண்டலீ னிருத்த துர்தர ஸ்புரத்
குஹூ நிஸிதினீ தமஃ ப்ரபந்த பந்து கண்தரஃ |
நிலிம்ப னிர்ஜரீ தரஸ் தனோது க்றுத்தி ஸிந்துரஃ
கலா நிதான பந்துரஃ ஸ்ரியம் ஜகத் துரந்தரஃ || 8 ||

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா
வலம்பி கண்ட கந்தலீ ருச்சி ப்ரபத்த கந்தரம் |
ஸ்மர ச்சிதம் புர ச்சிதம் பவ ச்சிதம் மக ச்சிதம்
கஜ ச்சி தாந்தக ச்சிதம் தம (அ)ந்தக ச்சிதம் பஜே || 9 ||

அகர்வ ஸர்வ மங்களா கலா கதம்ப மஞ்ஜரீ
ரஸ ப்ரவாஹ மாதுரீ விஜ்றும்பணா மது வ்ரதம் |
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந் தகா (அ)ந்தகாம்தகம் தம (அ)ந்தகாம் தகம் பஜே || 10 ||

ஜயத் வத ப்ரவிப்ரம ப்ரமத் புஜங்கம ஸ்வஸத்
த்வினிர்கமத் க்ரம ஸ்புரத் கரால பால ஹவ்ய வத் |
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ ஷிவஃ || 11 ||

சகல உயிர்கள் மற்றும் வஸ்துக்களிலும் சதாசிவனே உறைந்திருப்பதால், உலகின் இருமை நிலைகளைக் கடந்து ஒருமை நிலையை எய்த இறைஞ்சும் விதமாக 12 வது ஸ்லோகம் அமைந்துள்ளது.

த்றுஷத் விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்திக ஸ்ரஜோர்
கரிஷ்ட ரத்ன லோஷ்டயோஃ ஸுஹ்றுத் விபக்ஷ பக்ஷயோஃ |
த்றுணா (அ)ரவிந்த சக்ஷுஷோஃ ப்ரஜா மஹீ மஹேந்த்ரயோஃ
ஸமம் ப்ரவர்திகஃ கதா சதாஷிவம் பஜே || 12 ||

கதா நிலிம்ப னிர்ஜரீ னிகுஞ்ஜ கோட்டரே வஸன்
விமுக்த துர்மதிஃ ஸதா ஸிரஃ ஸ்த மஞ்ஜலிம் வஹன் |
விமுக்த லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ
ஷிவேதி மந்த்ர முச்சரன் கதா ஸுகீ பவாம் யஹம் || 13 ||

இமம் ஹி நித்ய மேவ மு(உ)க்த மு(உ)த்தமோத்தமம் ஸ்தவம்
படன் ஸ்மரன் ப்ருவன் னரோ விஸுத்தி மேதி ஸந்ததம் |
ஹரே குரௌ ஸுபக்திம் (ஆ)ஸு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸு ஷங்கரஸ்ய ச்சிந்தனம் || 14 ||

பூஜா வஸான ஸமயே தஸ வக்த்ர கீதம் யஃ
ஷம்பு பூஜன பரம் பட்ததி ப்ரதோஷே |
தஸ்ய ஸ்திராம் ரத கஜேந்த்ர துரங்க யுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸு முகிம் ப்ரததாதி ஷம்புஃ || 15 ||

நண்பர்களே தினப்பிரதோஷம், மாதப்பிரதோஷங்கள், மகா பிரதோஷ காலங்களில் நீங்கள் இதை பாராயணம் செய்து பாடி மஹாதேவனின் பூரண அருளைப்பெறுங்கள்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *