பொன்னும் பொருளும் பெற வேண்டுமா? -கந்தபுராணத்தில் கச்சியப்பசுவாமி சொன்ன வழி!

Murugan

“ஓம் சரவணபவ” என்பது முருகனின் திருவருளை பெற உதவும்  மிக சக்தி வாய்ந்த உன்னத திருமந்திரம்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதி, ராதா, காளி, காயத்ரி ஆகிய ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்ந்தவர் கார்த்திகேயன் ஆவார்.

அணைத்தவள் தாய் பார்வதி ஆறு குழந்தைகளை எடுத்து அணைத்ததால் ஆறுமுகமும் ஒருடலும் ஆனவன். ஸ்கந்தன் (அணைக்கப்பட்டவன்) அடியார்கள் பற்றிக் கொள்ள தூணாய் விளங்குபவன். தமிழில் கந்து என்றால் தூண் எனவே கந்தன். முருகனை வடநாட்டினர் கார்த்திகேயன் என்றே வணங்குவார்கள்.

முருகனின் தந்தை பரமசிவன் பிரபஞ்ச குருவாக கருதப்படுபவர், அவரே தக்ஷிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர், லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகப்பெருமான். அதனாலேயே அவருக்கு “சுவாமிநாத சுவாமி ” என்ற பெயர் உண்டு.

ஓம்
ஓம்

ஒரு முறை சிவபெருமான் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் “ௐ” என்னும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு நினைவூட்டும் படி கூறிய போது முருகன் தன்னை குருவாக ஏற்றுக்கொண்டால் பிரணவத்தை உபதேசிப்பதாக கூறினார், சிவனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகனை மடியில் அமர வைத்து பிரணவ மந்திரமான “ௐ” என்னும் மந்திரத்தை முருகன் உபதேசிக்க பெற்றுக்கொண்டு நினைவுகூர்ந்தார்

இந்த சம்பவம் கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தளம் மிகவும் சக்திவாய்ந்த தலமாக கருதப்படுகிறது.

முருகனை வழிபட சிறந்த மந்திரம் ” ஓம் சரவணபவ” என்பதாகும்.

சரவணபவ எனும் மந்திரம் மிக சக்தி வாய்ந்தது. ஓதுவோர்க்கு என்னென்ன கிடைக்கும்?

ச – லட்சுமி கடாக்ஷம் (செல்வம்)

ர – சரஸ்வதி கடாக்ஷம் (கல்வி)

வ – போகம் (இன்பம்)

ண – சத்ரு ஜெயம் (வெற்றி)

ப – ம்ருத்யு ஜெபம் (முக்தி)

வ – நோயற்ற வாழ்வு

மேலும்…

“ௐ” என்பது பிரணவ மந்திரம்.

“ச” என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது

“ரா” என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது

“வ” என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது

“ந” என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது

“ப” என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது மற்றும்

“வ” என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.

நம் வாழ்வில் இதைவிட வேறென்ன வேண்டும்? சொல்லுங்கள் முருகனின் திருநாமத்தை. நினைத்தது நினைவேற எப்படி சொல்லவேண்டும் என்று கேட்கிறீர்களா?

” ஓம் சரவணபவ” மந்திரம் முருகனின் அருளை பெற சிறந்த மந்திரமாகும், வெள்ளிக்கிழமை நாளில் விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொன்னால் நம் எண்ணங்கள் பூர்த்தியாகும், நினைத்தது நிறைவேறும்.

“ஓம் சரவணபவ” என்கிற மந்திரத்தை 1008 முறை ஒருவர் தினமும் சொன்னால் அவருக்கு பொன் பொருள் சேர்ந்து வேண்டியது வேண்டிய வண்ணம் நிறைவேறும், இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பு, அது முருகனுக்கு பிடித்த நாளாகும்.

ப்ரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபித்து இனிப்பான பாலில் குங்குமப்பூ கலந்து முருகனுக்கு நைவேத்யமாக படைத்தால், வாழ்வில் பல சிறப்புகளை அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஷண்முக மந்திரம்
ஷண்முக மந்திரம்

கார்த்திகை விரத பலன்:

இந்த விரத மகிமையை சிவன் பார்வதிக்கு விளக்கியுள்ளார். கச்சியப்பரின் கந்த புராணத்தில் நாரதர் முசுகுந்தனுக்கு சொல்வதாக இது உள்ளது. கார்த்திகை விரதமிருப் போர் புத்திரப்பேரும், பொருட்செல்வமும், பசுக்களும், கல்வியும் வேண்டுவோர் அவற்றைப் பெறலாம். எதுவும் வேண்டாதவர் ஞானமும், முக்தியும் பெறுவர். இதில் சந்தேகம் இல்லை.

முருகனைப் பாடும் சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும், பரிபாடலில் சில பாடல்களும் ஆகும். முருகனின் ஆறு திருமுகங்களைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்.

“உலகை பிரகாசிக்கச் செய்வது ஒரு முகம்

பக்தர்களுக்கு அருள்வது ஒரு முகம்

உபதேசம் புரிவது ஒரு முகம்

வேள்விகளைக் காக்க ஒரு முகம்

தீயோரை அழிக்க ஒரு முகம்

வள்ளியுடன் குலவ ஒரு முகம்”

என்கிறார்.

உங்கள் பிரச்னைகளுக்கு வேத வழியில் தீர்வு காண, வாழ்வில் மேன்மை அடைய, வெற்றிகளை குவிக்க, எல்லா செல்வமும் பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டுகிறது

வானிய வேத வாஸ்து & ஜோதிட கேந்திரம்.

ஹரன் விஜய் பதிப்பகம்.

அமைதி சோலை, திருநகர், மதுரை.

அன்புடன் வரவேற்கிறோம்.

Navamani
ஜோதிட பேராசான் புலவர் நவமணி சண்முக வேலு.

– ஜோதிட பேராசான் நவமணி சண்முகவேலு

பாரம்பர்ய ஜோதிட நிபுணர். 50 ஆண்டுகால வாஸ்து நிபுணர், பிரசன்ன ஜோதிட வித்தகர்… இளம் தலைமுறைக்கு இந்த அற்புத கலையை கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் கொண்டவர்… விருப்பம் உள்ளவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

தேவைபடுபவர்கள் ஜோதிட ஆலோசனைகளை பெறலாம்.

தொடர்புக்கு – 94431 46912.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *