திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மிகப் பெரிய கோவிலில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி 12 அடி (3.7 மீ) உயரத்தில் கம்பீரமாக சேவை சாதிக்கிறார். தாயார் திருநாமம் செங்கமலத்தாயார்.
24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்ட பிரம்மாண்ட கோவில் இது. ஹரித்ரா நதி எனப்படும் இங்குள்ள தெப்பக்குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும். கடந்த 27-ம் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
படம்: 4-வது திருநாள் அன்று தங்க கோவர்த்தனகிரி வாகனத்தில் கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி எழுந்தருளிய காட்சி.