இறை வழிபாட்டுக்கு உகந்த மலர்களும் அதன் பலன்களும்

மலர் வழிபாடு

செந்தாமரை நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும் தகப்பனாருக்கு ஆயுள் பலத்தையும் , சூரிய பகாவனின் அருளையும் பெற்றுத் தரும்.

சிவப்பு அரளி தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமையைக் கூட்டி வைக்கும்.

வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை,  மல்லிகை,இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும்.மனதில் தெளிவு பிறக்கும்.

மஞ்சள் அரளி, பொன் அரளி மலர்கள் கடன் தொல்லையை நீக்கும்.கன்னியருக்கு திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குருகிரகப் பீடையை நீக்கும்.

பாசிப் பச்சையும்,மருக்கொழுந்தும் நல்ல விவேகத்தையும், சுகபோகங்களையும், புத கிரக அருளையும் பெற்றுத் தரும்.

நீலச் சங்கு புஷ்பம் ,நீலக் கனகாம்பரம் போன்றவை அவச் சொற்கள்,தீராத அபாண்டங்கள்,தரித்திரம் ஆகியவற்றைத் தீர்க்கும்.சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும்.ஆயுளைப் பெருக்கும்.

வில்வ புஷ்பம்,கருந்துளசிப் புஷ்பம்,

மகிழ மலர் ஆகியவை இராகு, கேது தோஷங்களை தீர்த்து வாழ்வில் வளம் தரும்.

அடுக்கு அரளி,செம்பருத்தி போன்றவை ஞானம் மற்றும் தொழில் விருத்தி போன்றவற்றைத் தரும்.

பாரிஜாதம்,அல்லிப் பூ,மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும்.தாயாரின் ஆயுளை கூட விருத்தி செய்யும், சந்திர கிரகப் பிரீதியைத் தரும்.

மலராது என்று தெரிந்த மொட்டுகளையும் , காலில் மிதிக்கப்பட்ட புஷ்பங்களையும் பூஜைக்குப் பயன்படுத்துதல் கூடாது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *