நாம் வாழ்வில் வெற்றிபெறுவதற்கு தடையாக ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் அதை நம்மிடம் அண்டவிடாமல் காக்கும் வல்லமை நரசிம்மருக்கு உண்டு.
எடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்க முடியாமல் தவித்துவருபவர்களுக்கு, பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அனைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி சித்தர் நமக்காக அருளி இருக்கிறார்.
புலிப்பாணி சித்தர் அருளிய மந்திரத்தை நாம் அனைவரும் படித்து பயன்பெறுவோம்.
பாடல்:
“பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு
பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே
ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க
ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா”
–புலிப்பாணி ஜாலத்திரட்டு 81
மந்திரம்
ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக் குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல் பிசாசுபேய் பொடிபட் டோடத்
திரமாக நரசிங்க ராஜா வானை சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா
இதை இலட்சம் உரு கொடுக்க சித்தியாகும். அதன் பின் நம்மை சுற்றி உள்ள அனைத்து தீய சக்திகளும் பறந்தோடும்.
ஸ்ரீந்ருஸிம்ஹர் ப்ரபத்தி ஸ்லோகம்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ரபத்தி படிக்க எல்லா துன்பங்களும் பறந்தோடும் .
நரசிம்மர் படத்திற்கு துளசி மாலை சாற்றி, உங்களால் முடிந்த பாலோ, பானகமோ அல்லது வெறும் துளசி தண்ணீரை கூட நைவேத்தியமாக படைத்து நரசிம்மரை வழிபடலாம். காய்ச்சிய பசும்பாலை ஆற வைத்து நிவேதனம் வைப்பது நரசிம்மருக்கு மிகவும் பிடித்த நிவேதனம் ஆகும்.
பின்னர் தியானத்தில் அமர்ந்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உங்களால் முடிந்த அளவிற்கு 3, 12, 24, 48 என்கிற எண்ணிக்கையில் உச்சரிக்கலாம். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்தபின் நைவேத்திய பிரசாதத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் நரசிம்மருக்கு பூஜை செய்து வந்தால் வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடியே ஈடேறும்.
மந்திரம்
மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே
பொருள்
நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:
சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:
அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:
எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:
இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:
எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:
உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!!
நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்