ராம நாம மகிமை: பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்

நமக்கு நன்மை வர வேண்டுமானால் ‘ராம நாமத்தை’ இடைவிடாமல் கூறவேண்டும். காலால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ‘ராம் ‘ என்றே நடக்கவேண்டும்.
‘ ராம நாம’ ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் ‘ராம நாமமே ‘ தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும், தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே.
எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும், புகழ் கிடைக்கும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்.
ராம நாமம் சொல்ல துவங்குங்கள். உங்கள் வாழ்வில் அந்த கணத்திலிருந்து புது அத்தியாயம் துவங்க ஆரம்பித்துவிடும். இது சத்தியம்.உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும்
உண்டாம் வீ டியல் வழியதாக்கும் வேரியம்
கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை
நீறு பட்டழிய வாகை சூடிய சிலையிராமன்
தோள்வலி கூறுவார்க்கே.

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.
இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

ஒரு வீட்டில் உள்ள பெண் ‘ராம நாமா’ சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
பெண்களின் மாதாந்திர நாட்களிலும் ‘ராம நாமா’ சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம். ‘ராம நாமா’ சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும் பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ……அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்

‘ராம நாமா’ சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *