ஸ்ரீவில்லிபுத்தூர்: நோய் தீர்க்கும் மருந்தாக தைலப்பிரசாதம்…

SriVilliputhur

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.

திருவில்லிப்புத்தூர் புராதன வரலாறு:

திருவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. வில்லி, கண்டன் என்ற இரண்டு குறவர் சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன், வேங்கை புலி ஒன்றை துரத்தி செல்கிறார். அவரை, புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை, தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகின்றார் வில்லி கண்முன் காட்சியளித்த பெருமாள் கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும், பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப் போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோபுரத்துடன் கோவில் எழுப்பி வழிபட்டு வரும்படி கூறி மறைகிறார். அதன்படி வில்லி அடித்தளமிட்டு தலத்தை உருவாக்கிய குறிஞ்சி குறவர் வில்லி, கண்டன் ஆட்சி புரிந்த இந்த ஊருக்கு திருவில்லிப்புத்தூர் என்று பெயர் வந்தது என்று தல புராணம் கூறுகிறது.

நோய் தீர்க்கும் தைலப்பிரசாதம்

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசுப்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்தத் தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

 

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *