ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்:
இந்த கலியுகத்தில், இந்தப் புனிதமான ‘பாரத’ தேசத்தில் அவதரித்த மகான்கள் அனைவரும் நமக்கு முக்திக்கான எளிதான பாதைகளில் ஒன்றை முக்கியமாகக் காட்டியுள்ளனர் – கடவுளின் தெய்வீக நாமங்களைப் பாடி. அவர்களில் முதன்மையானவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த பகவான் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெரிய துறவி ஆவார்.
காஞ்சி காமக்தொட்டி மடத்தில் ஏறிய அனைத்து மகான்களும் ஆதி சங்கரரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், அவர்களில் முக்கியமானவர் போதேந்திர சுவாமிகள். ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி. காஞ்சிபுரத்தில் ஸ்ரீமோகனபாண்டுரங்கன், ஸ்ரீ சுகுணாதேவி தம்பதியருக்கு, அப்போதிருந்த ஸ்ரீவிஸ்வாதிகேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் கருணையால் பிற்ந்தவர். அவரின் பூர்வாசிரம பெயர் புருஷோத்தமன். சிறு வயதில் ஸ்ரீபோதேந்திரருக்கு ஞானசேகரன் என்னும் நண்பர் உண்டு இருவரும் காஞ்சி மடத்திலேயே வேதங்களை கற்றுவந்தனர். அப்பொழுது ஸ்ரீவிஸ்வாதிகேந்த்ர ஸ்வாமிகள் வாரணாசி சென்றதால், நண்பர்கள் இருவரும் படிப்பு முடிந்ததும், ஸ்வாமிகளை சந்திக்க நடந்தே வாரணாசி சென்றனர். செல்லும் வழியில் ஞானசேகரன் நோய்வாய்பட்டார். அவர் இறக்கும்முன் புருஷோத்தமன் என்னும் போதேந்திரரிடம் தன் அந்திமகாரியங்களை செய்ய சொன்னார். பிறகு வாரணாசியில் ஆசாரியரை தரிசனம் செய்தபின்னர் கங்கையில் மூழ்கி தம்மை வந்தடைய வேண்டினாராம். அதற்கு ஒப்புக்கொண்ட புருஷோத்தமன், ஞானசேகரனது அந்திம காரியங்களை முடித்துவிட்டு, வாரணாசி சென்று ஸ்ரீ ஆசாரியரை சந்தித்து விவரமெல்லாம் கூறி கங்கையில் மூழ்க முற்பட்டார். ஆசாரியர் அவரை தடுத்து, சன்யாசம் மேற்கொண்டாலே முற்பிறப்பு நீங்கிவிட்டதாக பொருள் என அவருக்கு எடுத்துரைத்து, ”ஸ்ரீ பகவ்ன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்” என பெயரிட்டு அவரை சன்யாசம் மேற்கொள்ளசெய்தார்.
சிறிதுகாலம் சென்றபிறகு அவருக்கு தாரகமந்த்ரோபதேசம் செய்தாராம். ஸ்ரீராமநாமமே தாரகமந்திரமாகும். பின்னர் அவரை பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ஸ்தலத்துக்கு சென்று, ஸ்ரீ லக்ஷ்மிதர கவி அவர்கள் எழுதிய “பகவ்ன்நாம காமுடி” என்னும் நூலை அவரிடம் பயின்று, பகவன் நாமத்தின் விசேஷத்தை உலகமெங்கும் பரப்பவேண்டும் என ஆசிர்வதித்து அனுப்பினார்.
பூஜைகள், யாகங்கள் மட்டுமின்றி நாமசங்கீர்த்தனத்தாலும் இறைவனை அடையலாம் என பாமரமக்களுக்கு ஸ்ரீ போதேந்திரர் எடுத்துரைத்தார். கலிகாலத்தில் பகவன் நாம்த்தை பஜனைகளாலும், நாமசங்கீர்த்தனங்களாலும் துதித்தால் இறைவனின் கருணையை பெறலாம் என எடுத்த்ரைத்தார். ”பகவன்நாம ரஸோதயம்” போன்ற பலநூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவருடன ஸ்ரீஸ்ரீதரஅய்யாவாளும் இணைந்து, தென்தமிழ்நாட்டின்மூலை முடுக்கெல்லாம் நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை உரைத்ததாக வரலாறு. அந்தகாலகட்டத்தில் ஸ்ரீபோதேந்திரர், ஸ்ரீதரஅய்யாவாள், மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள் ஆகிய மூவரும் சம்ப்ரதாயநாமசங்கீர்த்தனத்தின் மும்மூர்த்திகள எனஅழைக்கப்பட்டனர்.
ஸ்ரீ ராமநாமத்தின் பெருமையை ஸ்ரீ போதேந்திரர் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் அவர் கால்கள் படாத இடமே இல்லை என்று கூறுவார்கள்.
அவர் தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை நாம கிராமங்களாக மாற்றியிருந்தார். ஒரு சமயம் மன்னார்குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் சுவாமியை தரிசனம் கண்ட அந்த மனிதர் மெய் சிலிர்த்து போனார்.
அவரது தேஜஸை கண்டு, இவர் ஒரு உண்மையான மஹாத்மா என்று உணர்ந்து தொழுது வணங்கி நின்றான்.
நிமிர்ந்து பார்த்தார் ஸ்வாமிகள்..
ஸ்வாமிகள் நம் க்ருஹத்தில் பிக்ஷை எடுத்துக்கணும்.
அவரை ஏற இறங்கப் பார்த்த ஸ்வாமிகள்
பிக்ஷைக்கா, நான் அன்ன பிக்ஷைக்கெல்லாம் வருவதில்லை யேப்பா.. நான் நியமம் கடைபிடிப்பவன்…
நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ… ஸ்வாமி அவசியம் வரணும்.
நான் நாம பிக்ஷைக்குத்தான் வருவேன்.
புரியலையே..
ராமநாம ஜபம் பண்றவா க்ருஹத்தில்தான் பிக்ஷை எடுத்துப்பேன்.
அவ்ளோதானே, ராமநாம ஜபம் சிறப்பாக பண்றேன். ஸ்வாமியே உபதேசம் பண்ணுங்கோ.
மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த மனிதருக்கு ராமநாம உபதேசம் செய்துவிட்டு, நாளை பிக்ஷைக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் ஸ்வாமிகள்.
மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி பிக்ஷைக்கு வருகிறார் என்று அந்த வீடே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது.
ஸ்வாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து, பூஜைகள் செய்தனர். பிறகு பிக்ஷைக்கு இலை போடப்பட்டது. ஸ்வாமிகள் அமர்ந்ததும் கவனித்தார், மூன்று வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை, தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஸ்வாமிகள், அவனுக்கும் ஒரு இலை போடுங்கள் என்று சொல்லிவிட்டுக் குழந்தையை இங்க வாப்பா என்று அழைத்தார்.
குழந்தை எந்த சலனமும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஒன்று வரவேண்டும், அல்லது வரமாட்டேன் என்று சொல்லவேண்டும், தலையையாவது அசைக்கவேண்டும்.
சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்க வாப்பா என்றார்.
அந்த க்ருஹஸ்தர் வணங்கிவிட்டுச் சொன்னார்.
“ஸ்வாமி, அவனுக்குக் காதும் கேக்காது, வாயும் பேசமாட்டான். அதான் அவனுக்குப் புரியல.” என்றார்.
ஸ்வாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
“ஸ்வாமி நீங்க நம் இல்லத்திற்கு பிக்ஷைக்கு வந்துட்டு அழக்கூடாது. எங்க வினை, நாங்க அனுபவிக்கறோம். சந்நியாசி கண்ணீர் பூமியில் விழ கூடாது, விழுந்தா ஊருக்கே ஆகாது. தயவு செய்து சாப்பிடுங்கள்” என்றார்.
அன்று காலை நடந்த சம்பவத்தை சுவாமி நினைத்து பார்த்தார்…
“ஒருவன் நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட, யாராவது சொல்வதைக் கேட்டாலும்கூட போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுக்கு பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும்” என்று ஸ்வாமிகள்.உபதேசம் செய்ததை நினைத்து பார்த்தார்.
காதும் கேட்காது, வாயும்பேசாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு என்னுடைய உபதேசத்தினால் எந்த நன்மையையும் உண்டாகாதே… இவர்களுக்கும் நற்கதி கிடைக்க வேண்டுமே என்று வருந்தி ஸ்வாமிகள்.
அந்த மனிதர் மிகவும் கேட்டுக் கொண்டதால் ஏதோ பேருக்கு, ஸ்வாமிகள் அவருக்குள்ள நியமப்படி, அனைத்தையும் திரட்டி ஏழு கவளங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஸ்வாமிகளை வழியனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் தெருமுனை வரை சென்று விட்டனர். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். அவனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது.
ஸ்வாமிகள் பிக்ஷை செய்த இலையில் பரிமாறிய அத்தனையும் அப்படியே இருந்தன. அவர் ஏதோ இவர்கள் கேட்டதற்கு இணங்க, சிறிது சாப்பிட்டு விட்டு சென்றார். பசியினால், குழந்தை இலையிலிருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஸ்வாமிகளை வழியனுப்பி அனுப்பி வைத்தனர். ஸ்வாமிகள் நம் வீட்டுக்கு வந்துட்டு இப்படி வருத்தப்படுபடி ஆச்சே என்று வருந்திக்கொண்டே வீட்டுக்குள் திரும்பினர்.
எல்லாரும் வீட்டு வாசலில் வந்ததும் அப்படியே நின்றனர். அவர்களுக்குத் தாங்கள் பார்ப்பது கனவா நினைவா ஒன்றும்புரியவில்லை.
வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை, மதுரமான குரலில் ராம நாமத்தை பாடிக்கொண்டிருந்தான்.
ஒரு உண்மையான் மஹான் உண்ட அமுது, அவரது ஸ்பர்சம், ஸ்மரணம், வாக்கு, பார்வை, அனைத்துமே பவித்ரமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்க இவற்றில் ஏதோ ஒன்று போதுமானது.
கோவிந்தபுரத்தில் ஸ்வாமிகள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் காவேரிக்கரையில் மணலில் தான் பள்ளம் தோண்டி ஒளிந்துகொள்வதாகவும், தன்னை அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என விளையாட்டு காட்டினாராம்.அந்த சிறுவர்களும் அவரை கண்டுபிடித்தனராம்.இப்படியே விளையாட்டு காட்டி,ஓர் இடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவரைத்தேடி கண்டு பிடிக்க வந்த மக்களிடம் தான் சமாதி நிலையை அடைந்ததை அசரீரி மூலம் தெரிவித்தார். காலப்போக்கில் அவர் சமாதியடைந்த இடத்தை ஒருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.
சுமார் 100 வருடங்களுக்கு பிறகு அவர் சமாதியடைந்த இடத்தை மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள் கண்டுபிடித்தார். காவிரிக்கரையில் ஓரிடத்தில் ராமஜபம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவ்விடத்தில் ஸ்வாமிகளின் சமாதியை கண்டு பிடித்தார்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சமாதி மூழ்கிவிடும் என்பதால், அப்போது தஞ்சையை ஆண்ட மன்னரிடம் காவிரிக்கரையை அகலப்படுத்தி, ஆடுதுறை பக்கம் திருப்பிவிட வேண்டினார். அந்த மன்னரும் அவ்வாறே செய்ய, ஸ்ரீ போதேந்திரர் சமாதியை மன்னன் உதவியுடன் கட்டியதாக வரலாறு. அதிஷ்டானத்தில் இரவு தங்குபவர்களுக்கு இன்றும் ராமநாம ஜபம் கேட்பதாக கூறுகின்றனர். இரவில் ஒவ்வொருசமயம் கையில் தண்டத்துடன் ஸ்ரீபோதேந்திரர் காட்சியளிப்பதாகவும் கூறுகின்றனர்.