சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது. சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்டவர்கள் நல்ல பலனை அடைந்துள்ளார்கள். சொந்த வீடு,கட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை . முருகப்பெருமானிடம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
நமக்காக அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! முருகப்பெருமான் திருவடியை உறுதியோடு பிடித்துக்கொள்ளுங்கள்.
பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு எந்த மொழியும் அவசியமில்லை உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் அனைத்து உயிரனங்களிடமும் இருக்கக்கூடிய ஒரே மொழியான உணர்வு ( அதிர்வலைகள் ) மொழியே போதும். உணர்வுகள் மட்டுமே உண்மையை அப்படியே வெளிப்படுத்திவிடும். கோடி ரூபாய் கோடி ரூபாய் கையிலிருந்தும் ஏழ்மை மனநிலையில் இருந்தால் ஏழ்மையை கவரந்திழுப்பீர்கள். ஏழ்மையில் இருந்தாலும் பணக்கார மனநிலையில் இருந்தால் பணத்தை கவர்ந்திழுப்பீர்கள் என்பதை நோனாவ்வில் கொண்டு நல்லதையே எண்ணுங்கள்.