அதியமான்கோட்டையில் அருளும் உன்மந்திர பைரவர்

Bhairavar

சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் ஒன்றான கால பைரவருக்கு இந்தியாவிலேயே காசிக்கு அடுத்து இரண்டாவது தனிக்கோயிலில் கால பைரவர் அருள்பாலிக்கும் தலமான, பைரவரின் 64 வடிவங்களில் முதன்மை வடிவமான “உன்மந்திர பைரவர்” வடிவத்தில் காட்சி தரும் தலமான, கடையெழு வள்ளல்களில் “அதியமான்” கட்டிய கோயிலான தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிகப் புகழ்பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோயில் வரலாறை பார்ப்போம்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது காசிக்கு அடுத்தபடியாக கால பைரவர் கோயில். சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாகப் பைரவர் விளங்குகின்றார். ஔவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த அதிகமாகத் தான் இங்குள்ள தக்ஷன காசி உன்பத பைரவருக்குக் கோயிலைக் கட்டி உள்ளார்.இக்கோயிலானது 1200 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என வரலாறு கூறுகின்றது. அதியமான் அவையிலிருந்த வேத விற்பனர்களால், வேத மகரிஷிகள் காசிக்குச் சென்று பூஜை செய்த பின்பு இச்சிலைக் கொண்டுவரப்பட்டு, தெற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். 9-ம் நூற்றாண்டில் நிறைய கோவில்கள் இடிக்கப்பட்டது.
அப்பொழுது அதியமான் மன்னரால் வெல்ல முடியாத சூழ்நிலை அப்பொழுது ஆஸ்தான ஜோதிடர்கள் காலபைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் கூறினர். தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர்.அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார். இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன. ஆதியமான் மன்னரால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட பின்புதான் மன்னர் போரில் வென்றார். இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

தல வரலாறு:

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒருமுறை அதியமான் மன்னருக்கு அபூர்வமான நெல்லிக் கனி கிடைத்தது. அந்த நெல்லிக் கனியை உண்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது தெரிந்திருந்தும், அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல், தமிழின்பால் கொண்டிருந்த தனிப் பற்றின் காரணமாக, தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை ஔவை பிராட்டிக்கு தந்து மகிழ்ந்தான்.
காரணம் கேட்டபோது, அந்த நெல்லிக் கனியைத் தான் உண்பதை விடவும், ஔவை பிராட்டி உண்டால் ஔவையுடன் சேர்ந்து தமிழும் செழித்துச் சிறக்கும் என்று கூறிய வள்ளல் அதியமான். அந்த அளவுக்கு நம் தொன்மைச் சிறப்பு மிக்க தமிழின்பால் அளப்பரிய பற்று கொண்டிருந்தார்.
என்ன இருந்தாலும் அதியமான் ஒரு சிற்றரசர்தானே! பொருள் பலமும் சரி, படைபலமும் சரி பகை மன்னர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரிடம் இல்லை.
எப்போது பகை மன்னர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது அதியமான் மன்னருக்கு. நாளடைவில் அந்த அச்சமே அவரை மனநிம்மதி இல்லாமல் செய்தது.
தனக்கு மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜகுருவையும் அமைச்சர் பிரதானிகளையும் கலந்து ஆலோசித்தார். தன் பகை மன்னர்களிடம் இருந்து பாதுகாக்க படைபலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் தெளிவு பெற்றார்.

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிந்த மன்னர், கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார்.
கால பைரவரைப் பற்றி அறிந்துகொண்டதும், தன் அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, காலபைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். காலபைரவர் விக்கிரகம் வருவதற்குள்ளாகவே, கோயில் கட்டும் திருப்பணியைத் தொடங்கிவிட்டார். கோயில் கட்டி முடிக்கவும், கால பைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
தான் கட்டிய கோயிலில் கால பைரவரை பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதியமான் மன்னர் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த கால பைரவர் என்பதால், தன் திருக்கரத்தில் திரிசூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார்.
தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் பைரவரை வணங்கி வருகின்றனர்.
ஆலயத்தில் அதியமான் மன்னரின் ஆட்சி மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.
காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர் தட்சிண காசி கால பைரவர் என்று பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார். அதன் காரணமாகவே இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. தருமபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிண காசி கால பைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.எதிரிகளுக்குப் பயந்து வாழ்ந்து வருபவர்களுக்கும் அருள்பாலிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற முத்தொழையும் செய்வதால் இவரைக் கால பைரவர் என்று அழைக்கின்றனர். காவல் தெய்வமாக இவர் விளங்குவதால் நாயே இவரது வாகனமாக உள்ளது.
இக்கோயிலின் மகாமண்டபம் நவகிரகங்களைக் கூரையாக்க வைத்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் செல்பவர்கள் குறுக்காகச் சென்று விடாமல் ஒன்பது கூரையின் கீழ் வரிசையாகச் சென்று கருவறையைத் தரிசனம் செய்து வர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கருவறையின் மூலவரின் திரு உருவில் நவகிரகங்கள் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. விநாயகர் சிலை கூட இல்லாத கோயிலில் மகாவீரரின் சிலை ஒன்று மட்டும் காணப்படுகின்றது. இக்கோயிலைக் கட்ட அதியமான் மன்னருக்கு மகாவீரர் உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.தேய்பிறை நாட்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டும் எனக் கால பைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி கோயில் வளாகத்தை 18 முறை பலம் வந்து பைரவரைத் தரிசனம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும், சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பில்லி, சூனியம் போன்றவை விலகும் எனப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேய்பிறை, அஷ்டமி நாட்களில் 1018 கிலோ காய்ந்த மிளகாய், 108 கிலோ மிளகு போன்றவற்றை கொண்டு குருதி ஹோமம் செய்யப்பட்டு, ராகு கால சிறப்பு வழிபாடும் செய்து வைரவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனைகள் நடைபெறுகின்றன.
வாரணாசியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சத்து 18 ஆயிரம் ருத்ராட்சைகளால் கட்டப்பட்ட பந்தலின் கீழ் அமர்ந்து பக்தர்களுக்குக் காலபைரவர் அருள்பாலிக்கின்றார்.

தேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் , குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு , 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.
பிறகு பூஜைகள் முடிந்ததும் தீர்த்தம் தெளிக்கும் நிகழ்வு நடைபெறும். இதனால் உடலில் ஆரோக்கியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். பில்லி சூனியம் முதலான துர்சக்திகள் தலைதெறிக்க ஓடும். கோட்டை காலபைரவர் கோயிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில் சென்று தரிசியுங்கள். வாழ்க்கையில் இனி எல்லாமே வளர்பிறைதான்.

வழிபாடு:
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை; மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.
தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
இது தவிர கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிண காசி கால பைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

செல்லும் வழி:

தர்மபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் திருக்கோயில். தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோயில் அமைந்திருக்கிறது

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *