திருவெள்ளறை திவ்ய தேசம் திருத்தேரோட்டம்

Thiruvellarai Divya Desam temple

ஸ்ரீரங்கத்திற்கும் முன்பாக தோன்றியதாக கருதப்படும் திருவெள்ளறை திவ்ய தேசம் திருச்சி – துறையூர் சாலையில் அமைந்துள்ளது. அயோத்தி மன்னன் சிபிச் சக்கரவர்த்தி இங்கு தமது படைகளுடன் தங்கி இருந்த போது, வெள்ளைப் பன்றி ஒன்று ஓடிச்சென்று ஒரு புற்றுக்குள் மறைந்ததைப் பார்த்தார். மார்க்கண்டேய ரிஷியின் வழிகாட்டுதல் படி அந்தப் புற்றுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, ஸ்ரீ புண்டரிகாக்ஷ பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) எழுந்தருளினார். தாயார் திருநாமம் பங்கஜவல்லி. ஏழு தீர்த்தங்கள் இக்கோயிலில் உள்ளன. வைணவ ஆசார்யர்கள் பலர் அவதரித்த திருத்தலம் இது. ஸ்ரீ உய்யக்கொண்டார் இங்குதான் திருநாடு எழுந்தருளினார். திருவெள்ளறையில் பங்குனி பிரம்மோற்சவம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை 7.30 மணிக்கு இரவு கருடசேவை நடைபெற்றது. ஏப்ரல் 4-ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *