மாமலையாவது திருநீர்மலையே என்று சுவாமி திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற வைணவ திருத்தலம் திருநீர்மலை.
சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்து அமைந்துள்ள இத்தலத்தில் மலைக்கோவிலில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலுமாக, வருடத்திற்கு இரண்டு தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று 31-ம் தேதி கருடசேவை புறப்பாடு (படம்) நடைபெற்றது. பங்குனி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை 2-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 3-ம் தேதி குதிரை வாகன சேவையும், 4-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன