ஒப்பிலியப்பன் கோவில் என்று அழைக்கப்படும் திருவிண்ணகர் திவ்யதேசம். மூலவர் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள். திருவிண்ணகரப்பன் மற்றும் ஸ்ரீ வெங்கடசலபதி என்ற திருநாமங்கள் கொண்ட பெருமாள்.திருநாகேஸ்வரம் அருகில் உள்ளது இந்த திவ்ய தேசம். மார்கண்டேய ஷேத்ரம் என்ற பெயர் கொண்ட ஷேத்ரம் ஆகும்.
மார்க்கண்டேய க்ஷேத்ரம் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் தல வரலாறு
மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர், திருமகள் தனக்கு மகளாகவும், திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வர வேண்டும் என்றெண்ணி, காவிரி ஆற்றின் கரையில் திருமாலைக் குறித்து 1,000 ஆண்டுகள் தவமிருந்தார். அப்படியே மகாலட்சுமி தேவி, மழலைக் குழந்தையாக திருத்துழாய்ச் (துளசி) செடியின் மடியில் தோன்றினார். அக்குழந்தையை மார்க்கண்டேயர் வளர்த்து வந்தார்.
உரிய பருவத்தில் ஓர்நாள் (பங்குனி மாதம் ஏகாதசி திருவோண நாளன்று) திருமால் வயது முதிர்ந்த பிராமணன் வேடத்தில் வந்து பெண் கேட்டார். என் மகளுக்கு சமைக்கத் தெரியாது என்று கூறி பெண் தர மறுத்தார் மார்க்கண்டேயர். உப்பில்லாமல் சமைத்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார் முதியவர். இக்கட்டான நிலையில் பெருமாளை வேண்ட, பெருமாள் சுய உருவைக் காட்டி, மகாலட்சுமியை மணம்புரிந்தார். இத்தலமே திருவிண்ணகர் எனப்படும் உப்பிலியப்பன் கோவில். பெருமாள் உப்பில்லாத பிரசாதத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்.
இங்கு பங்குனி பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
தல சிறப்புகள்:
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார் ஆகியோரால் பாடல்பெற்ற திருத்தலம்.
மூலவர்
ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்),
ஸ்ரீநிவாஸன்
சயனம்: நின்ற திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுகம்
வலப்புறம் பூமிதேவியுடன் , ஒப்பிலாத பெருமாள் உப்பிலியப்பன். ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்ற திருக்கரங்களுடன் வெங்கடாசலபதி கோலத்தில் பெருமாள் அருள்கிறார்..
திருப்பதி ப்ரார்த்தனையை இங்கே செலுத்தலாம்.
ம்ருகண்ட முனிவரின் பத்தினியின் விருப்பப்படி, தன் மகள் உப்பிட்டு சமைக்கத் தெரியாதவள் எனக் கூறியதால், உப்பில்லாத பிரசாதம் நைவேத்யம்.
அருகே ராகு தலமான திருநாகேஸ்வரம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனைத் தலம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடம் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை
மாலை : 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை
கோவிலுக்கு செல்லும் வழி
கும்பகோணத்திலிருந்து சுமார் 6 கிமீ.
நாலு ரோடிலிருந்து வரும் போது முதலில் திருநாகேஸ்வரம் சிவத்தலம், பின்னர் இக்கோயில்.
இங்கிருந்து 3 கிமீ தூரத்தில் அய்யாவாடி ப்ரத்யங்கராதேவி கோயில்.
தொடர்புக்கு
நிர்வாக அதிகாரி: 0435-2463385
கண்ணன் பட்டர்: 9486568159
கோயில் முகவரி:
திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்,
மார்க்கண்டேய க்ஷேத்ரம் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில்
ஒப்பிலியப்பன் கோயில்,
திருநாகேஸ்வரம் அஞ்சல் ,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம் – 612204