ஒரு ஜாதகத்தில் ஒருவர் ஜாதகத்திற்கு உண்டான பலன்களை பூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால் லக்னாதிபதி ராசி, நவாம்சம் மற்றும் இதர சோடச வர்க்கங்களில் பலம் பெற்று சுயம்பாவக பலமும் ஷட்பலமும் வலிமையுடன் இருக்க வேண்டும்.
மேலும் லக்னாதிபதி, 2ம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி இவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நிலையில் ஆட்சி, உச்சம், நட்பு பரிவர்த்தனை மற்றும் நவாம்ச பலம் மற்றும் சோடச வர்க்கங்களில் குறிப்பாக நவாம்சம்,
ஹோரா சக்கரம் மற்றும் தசாம்சம், ஏகதாம்சத்திலும் பலம் பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஜாதகர் மிகப் பெரும் கோடீஸ்வரராக இந்த மூன்று கிரகங்களும் சுப சஷ்டியாம்சத்திலும், சுப நாடியாம்சத்திலும் இருந்து சுயம்பாவக பலம் வலுத்து சிறந்த நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகர் மிகப்பெரும் கோடிஸ்வரனாக விளங்குவார். இதில் சூட்சமமாக பாவக மாற்றம் பாவாதிபதி மாற்றம் என்பது மிக மிக முக்கியமான இன்றியமையாத விஷயம் ஆகும்.
உதாரணமாக ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்து லக்னத்தின் புள்ளி அஸ்வினி 1ஆம் பாதத்தில் இருந்து மேஷத்தில் சுக்கிரன் அஸ்வினி ஒன்று அல்லது இரண்டாம் பாதத்தில் இருந்து செவ்வாய் மேற்குறிப்பிட்ட அதே நட்சத்திர பாதத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருந்தாலோ அல்லது செவ்வாய் ரிஷப ராசியில் பரிவர்த்தனை பெற்று கிருத்திகை இரண்டாம் பாதத்தில் இருந்து சனி பகவான் கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து அதாவது மேஷ லக்னத்திற்கு பதினொன்றாம் இடம் ஆகிய கும்பத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் உச்சம் அடைந்து ராசிக்கட்டத்தில் பதினொன்றாம் வீட்டிலிருந்து 3-ஆம் பார்வையாக லக்னத்தை பார்வை இடுவது சிறந்த பொருளாதார பலத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட மூன்று கிரகங்களும் ராசியில் ஆட்சி நவாம்சத்திலும் ஆட்சி உச்சம் என்ற நிலையும் சுயம்பாக பலமும் நிறைந்து விளங்குவார்கள்.
அதேபோல ஒருவர் கடக லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி ஆகிய சந்திரன் கடக லக்கினத்திற்கு 11ஆம் இடம் ஆகிய ரிஷபத்தில் உச்சம் அடைந்து சுக்கிரன் சேர்க்கை பெற்று அல்லது ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் கடகத்தில் பரிவர்த்தனை பெற்று இருந்து கடக லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியாகிய சூரியன் கடக ராசியில் ஓ அல்லது ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகர் பொருளாதார பலம் நிறைந்த கோடீஸ்வரனாக விளங்குவார்.
அதேபோல ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்து லக்னத்தில் குரு பகவான் திக் பலத்துடன் ஆட்சி பெற்று அமைந்து தனுசு லக்னத்திற்கு 2ம் இடம் ஆகிய மகரராசி அதிபதியாகிய சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் அடைந்து மூன்றாம் பார்வையாக தனுசு லக்னத்தை குரு பகவானையும் பார்வையிடுவது சிறப்பு மேலும் துலாம் ராசியிலேயே சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருந்தால் மேற்கண்ட கோடீஸ்வர யோகம் ஜாதகருக்கு கிடைக்கும்.