பலன் தரும் சூரிய நமஸ்கார மந்திரம்

suriyan

அதிகாலை எழுந்து சூரியனை வணங்குபவருக்கு அனைத்து நலங்களும் ஏற்படுவதாக வேதங்கள் கூறுகின்றன.சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

அந்த வகையில் சூரிய நமஸ்காரம் மந்திரம் பற்றியும் அதன் பலன்களையும் அறிவோம்.

சூரிய நமஸ்கார மந்திரம்

ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ

ஓம் ஹ்ரீம் ரவியே நமஹ

ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ

ஓம் ஹ்ரைம் பானவே நமஹ

ஓம் ஹ்ரௌம் கசாய நமஹ

ஓம் ஹ்ரஹ பூஷ்ண நமஹ

ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ

ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ

ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ

ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ

ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ

ஓம் ஹரஹ பாஸ்கராய நமஹ

இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் கூறி வழிபடுவது நல்லது. ஞாயிற்று கிழமையன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டிற்கு வெளியில் சூரியன் உதிக்கின்ற போது, அந்த சூரியனை பார்த்த படி இம்மந்திரத்தை 10 முறை அல்லது 108 முறை கூறி வழிபடுவதன் மூலம் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாகும். உடலின் எல்லா பகுதிகளிலும் இந்த மந்திரத்தின் அதிர்வு சென்று உடலுக்கு புத்துணர்வை தரும். மன அழுத்தத்தை குறைக்கும். உடலின் உறுப்புக்கள் அனைத்தும் நன்கு வேலை செய்ய இந்த மந்திர அதிர்வுகள் துணைபுரியும். இதை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினால் ஒருவருக்கு பல நன்மைகளை அளிக்கும்.

நாம் வாழும் இப்பூமியையும் நவ கோள்களுடன் சேர்த்து சூரிய குடும்பம் என்று கூறப்படுகிறது. கோடான கொடி வருடங்களுக்கு முன்னாள் இந்த பூமி உட்பட நவ கோள்களும் இந்த சூரியனின் வெடிப்பிலிருந்து உருவாகியது நாம் அறிவோம். அக்காலம் தொட்டு இக்காலம் வரை சூரியன் இந்த பூமியில் வாழும் மரம் செடி, கொடி, விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகிய எல்லா உயிர்களுக்கும் மிகுந்த ஆற்றலை தருகிறது என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கும் மற்றும் அந்த ஜாதகரின் உடலிலுள்ள எலும்புகளுக்கும் காரகனாக இருக்கிறார். நவீன விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் சூரிய ஒளி நமது எலும்புகளை பலப்படுத்தும் எனக் கூறுகிறது. எனவே சூரியனின் மிகுந்த நன்மையான ஆற்றல் வெளிப்படும் விடியற் காலை நேரத்தில் இம்மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் சிறந்தது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *