ஒரு வீடு வாஸ்துப்படி அமையும் பொழுது அதில் வாழும் நம்முடைய வாழ்க்கையும், எதிர்காலமும் வளமாகும் என்பது நம்பிக்கை.
வீடு, வேலை செய்யும் அலுவலகத்தில் செய்யக் கூடிய வாஸ்து குறிப்புகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்
வாஸ்துபடி நாம் தூங்கும் திசை என்பது நம்முடைய நினைவாற்றலையும், அறிவாற்றலையும் பெருகச் செய்கிறது. எப்பொழுதும் கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தால் நினைவாற்றல் பெருகும். நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகரிக்கும் எனவே தூங்கும் பொழுது கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குங்கள்.
நம் வீட்டில் கழிவறை இருக்கக்கூடாத திசை வடக்கு. வடக்கு திசையில் கழிவறை இருந்தால் நமக்கும் வரும் வாய்ப்புகள் அனைத்தும் நம்மை விட்டு சென்றுவிடும். சரியான திசையில் கழிவறையை அமைப்பது தான் இழந்தவற்றை மீட்டெடுக்க கூடிய நல்ல வழியாக இருக்கும். தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் போன்றவர்கள் கழிப்பறை எந்த திசையில் கட்டி இருக்கிறீர்கள்? என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் அலுவலகத்தில் அமரும் பொழுதும், வீட்டில் அமரும் பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமரும்படி செய்வது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். மற்ற திசைகளை காட்டிலும் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் நாம் அமர்ந்து இருக்கும் பொழுது நம்முடைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நமக்கு வரும் வாய்ப்புகளும் நம்மை விட்டு எங்கும் செல்லாமல், நமக்கு கிடைக்க வேண்டியவை, கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க செய்யும்.
அலுவலகத்தில் நீங்கள் இருக்கையில் அமரும் பொழுது உங்களுடைய முகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியதாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள், அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் மேஜையின் மீது வாஸ்து அதிர்ஷ்ட பொருட்களை வைப்பது கூடுதல் சிறப்பு பலன்களைக் கொடுக்கும். ஸ்படிகம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு அற்புதப் பொருள் ஆகும். இது அலுவலக மேஜையில் இருப்பது அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும்.
அலுவலக மேஜையின் மீது வைக்க வேண்டிய மற்ற சில வாஸ்து அதிர்ஷ்ட பொருட்களையும் வாங்கி வைத்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அது போல் அமரும் பொழுது வெறும் தரையில் அமர்வது அதிர்ஷ்ட வாய்ப்புகளை தடை செய்யும். ஏதாவது ஒரு துணியை விரித்து கொண்டாவது அமர வேண்டும். வெறும் தரையில் அமர்வது வாஸ்துபடி வாய்ப்புகளை தடை செய்யும் எனவே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பவர்கள் வெறும் தரையில் அமர்வதைத் தவிர்க்கவும்.
வீட்டின் பிரதான வாசல் எனப்படும் நிலை வாசல் கதவு சரியான திசையில் அமைந்துள்ளதாக என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தவறான திசையில் அமைந்திருக்கும் நிலை வாசலில் உள்ள வீடுகளில் இருப்பவர்களுக்கு வரக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் தடையாகும். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கடன் போன்ற தொல்லைகளும் அதிகரிக்கும் எனவே இந்த குறிப்புகளை தவறாமல் பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றி அமைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.